பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. அம்பிகாபதிக்குக் கண்ணனாங் அறிவுறுத்திய காதை

அடுத்தநாள் பிற்பகல் அளவளாவி மகிழக் கம்பர் இல்லம் கண்ணனார் போந்தார் வீட்டில் உரையாடி விட்ட பின்னர். ஏட்டை வைத்து, வெளியே ஏகலாம்

5 என்று கம்பர் இயம்ப, இருவரும் துன்று மாமரத் தோப்பை நோக்கிச் சென்றுகொண் டிருந்தனர் தெருவில் சேர்ந்தே ஆங்கொரு களிமகன் அவர்தமை நோக்கிப் பாங்கிலா மொழிபல பகர லானான்:

10 கம்ப ரடிகாள் கள்ளின் பெருமையை வம்பாய்ப் பழிப்பவர் வாழ வியலுமோ? கள்ளே உணவு! கள்ளே உயிரும்! கள்ளே உலகம்! கள்ளே தெய்வமும்! ஈது மறுப்பவர் என்னொடு துணிந்து

15 வாது செய்ய வருவர் கொல்லோ! திருக்குறள் தன்னைத் திரிபறப் படித்துளேன் திருவள் ளுவரதில் தெரியா துளறினார். படிப்பு வேறு பழக்கம் வேறாம் நடிப்புப் போதுமே நடைமுறை வேண்டுமே

20 ஒருதுளிக் கள்ளை உவந்து சுவைப்பின் மறுதுளி கேட்பீர்; மறுபடி மறுபடி மாந்தி மகிழ்வீர் மாண்பொடு திகழ்வீர்; வாந்தி எடுத்துச் 'சாந்தி' பெறுவீர் இப்போது கால்களே இத்தரை படுமால்;


8. களிமகன் - கள்குடியன். 9. பாங்கு - நற்பண்பு. 22. மாந்தி - அருந்தி, உண்டு.