பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அம்பிகாபதி காதல் காப்பியம்

கொள்ளுதல் இலன்கற் பழித்தலே குறிக்கோள்;
மதுவுண்ட தேனி மலரின் நீங்கிடும்;

125 இதுவும் அன்னதே; இன்பந் துய்த்தபின்
மெதுவாய் நழுவுவான் மீளான் பிறகே
என்பதை யறிவீர் என்று மொழிய,

(கம்பர் மனைவி கூறல்)

மன்பதை யறிய மணமுடித் தலையே
விரும்புவன் யானும் வீண்பழி தனக்கிடம்

130 தரும்படி யான்விடேன் தக்கதைச் செய்கென,

(கம்பர் கூறல்)

மன்னன் சோழனை, மரபு முறையில்,
கன்னல் மொழியைக் களிப்பொடு தருகெனக்
கேட்டுப் பார்ப்பேன்; கிட்டா தாயின்
தேட்டம் விடுத்துத் திரும்புவல் நம்மனை

135 வாட்டம் வேண்டாவென வழங்கினர் மாற்றமே.



123.குறிக்கோள்-நோக்கம். 124. மது-தேன். 128. மன்பதை-மக்கள்குழு. 182. கன்னல் மொழி - அமராவதி. 184. கேட்டம் - பேரவா. 135. மாற்றம் - பதில்.