பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

அம்பிகாபதி காதல் காப்பியம்


105மங்கல மணவிழா நடைபெறும் மணியை
எங்குள்ளோரும் எதிர்பார்த் திருந்தனர்.
இங்ஙனம் எங்கும் இன்பச் சூழ்நிலை
தங்கி யிருந்ததைத் தகுதிசால் புலவரும்
எங்ஙனம் முற்றும் இயம்ப வியலும்!

(சிம்மனின் செயல் நிலைமை)



110மணமகன் சிம்மனோ மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்
மணமுடன் தன்னை மண்ணிக் கொண்டான்
ஒருதோள் இருதோள் ஆகவும் உற்ற
இருதோள் நான்குதோ ளாகவும் எண்ணினான்;
அற்பனுக் குவாழ்வு வந்திடின் அணுவும்
வெய்யிலோ மழையோ விரவா மையிருள்
இரவி லுங்குடை ஏந்திச் செலல்போல்
இனிப்புகள் பலப்பல எல்லார் தமக்கும்
முனைப்புடன் மணத்தின் முன்னே வழங்கினான்;
115வெடிகள் பலவகை வெடிக்கச் செய்தான்
முடிபுனை விழாப்போல் முன்னிக் கூறுவான்:
அரச குமாரி என்பதற்காக
அமரா வதியையான் அடைய விரும்பிலேன்;
மற்றவள் இணையிலா வனப்பு மன்னப்
115பெற்றுள் ளமைக்கே பெரிதும் விரும்பினேன்.
அமரா வதிநேர் அழகி யொருத்தியை
அமர மணக்கும் ஆண்மக னேதன்
பிறவிப் பயனைப் பெற்றவன்; மற்றவர்
பிறவி யெடுத்தது பெருஞ்சுமை; கிடக்க.


101. நடைபெறும் மணி-நடைபெறும் மணிநேரம் 107. மணமுடன் - நறுமணப் பொருள்களுடன்: மண்ணிக் கொண்டான் - அலங் கரித்துக் கொண்டான். 110. அணுவும் - சிறிதும். 111. கலக்காத (இல்லாத): மை இருள் - கரிய இரவு. 116. முன்னி - கருதி. 119. மற்றவள் - மற்றபடி அவள்; வனப்பு - அழகு. 121. நேர் - போன்ற, 122. அமர - விரும்ப். 124. கிடக்க - அது கிடக்கட்டும்.