பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 227


(வேறு)

(8) என்ன குற்றம் செய்தேனியான் ஏனிந்த வாளாமை
        எழுந்து கூறீர்!
330 மன்னர்மகள் எனுங்கசப்பா? மற்றென்னை நினைவினின்று
        மறந்திட் டீரோ?
கன்னித்தமிழில்பேசிக் கலந்திங்கே களித்திடவே
        கடிய வாரீர்!
இன்னுந்தமிழ்ப்பணிகளுள இயற்றிட்டே வளர்த்தபின்னர்
        ஏகு வோமே!'

(9) செல்வர்தாம் வறியவரை சேரவொட்டார் எனுஞ்செய்தி
        செவ்வ னறிந்தோம்
கொல்வதவர் குறி,மணந்து கொள்ளவரும் ஏழையரைக்
        கொலையொறுப்பால்;
385 சொல்வதுதான் பொதுவுடைமை சொந்தவாழ்வில் வரும்போது
        சோர்ந்து போவார்
வெல்வதெவ்வா றின்னவரை வெறும்பேச்சால் இயன்றிடுமோ?
        வெல்வது புரட்சியே!'

(வேறு)



(10) 'உலகம் எம்கதை உணர்ந்து சால
        உற்றா ராய்ந்து
கலகம் இன்றிக் காதல் கொள்ளக்
        கற்றுக் கொள்க!
அலகாய்க் காதல் அகத்தில் மட்டும்
        அரும்ப வேண்டும்;
340 மலரைப் போல மணந்த பின்பே
        மலர்தல் நன்றே."


329 வாளாமை-பேசாமை (மெளனம்), 331 கடிய-விரைந்து. 333. செவ்வன் - நன்றாக. 334. குறி - குறிக்கோள் ; கொலை ஒறுப்பு - கொலேத் தண்டன. 339. அலகாய் - அளவாய்;.அகத்தில்மனத்தில்,