பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அம்பிகாபதி கூறல்)

25 மராமரம் மாய்த்த மாபெரு மறவனும்
இராமன், சீதை எனுமிவர் குறித்துக்
‘கண்ணுெடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்
றுண்ணவும் நிலைபெறா துணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’

30 என்னவே பாடிய எந்தையே! காதற்
கோவை பாடியோன் கொற்றவன் பயந்த
பாவையை விரும்பலில் பழுது யாதென,

(கம்பர் கூறுதல்)

இராமன் சீதை இருவரும் மருவு
விராவும் இருபெரு வேந்தர் மரபினர்

35 ஆதலின் அண்ணலும் அவளுங் கொண்ட
காதலோ சிறந்ததாய்க் கணிக்கப் பெற்றது.
நாஅமோ பூசனை நடத்தும் ஓச்சர்;
ஆஅமோ ஓச்சர்க் கரசர் உறவுதான்?
கற்றநின் தங்கை காவிரி தன்னிடம்

40 அற்றமா யொருவன் அடாதன செய்யின்
நினக்குச் செற்றம் நேரா தோவுரை!
தனக்கு நீதி தனி,பிறர்க் கொன்றோ?
அரச குற்றம் செய்ய அரசனால்
குறையக வையிலே கொல்லப் படுவாய்

45 எனவொரு கணியன் என்றோ மொழிந்தது
நினைவிருக் கின்றது நீவிழிப் பாயிரு
எனவே கம்பர் இயம்பிய காலை,


31. பயந்த - பெற்ற. 32. பாவை - பெண். 33. மருவு - சம்பந்தம். 37. ஓச்சர் - காளி கோயில் பூசனை நடத்தும் குலத்தவர். 40. அற்றம் - அழிவு, மறைவு. 41. செற்றம் - சினம். 44. அகவை - வயது. 45. கணியன் - சோதிடன்.