உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374 / அயோத்திதாசர் சிந்தனைகள்


5-9 சக்கு - கண், ஜீவா - நாவு,

சோடா - செவி, காயா - தேகம்,

கானா - மூக்கு.,

4 - வித கோஸாம்.

10-13 ரூபா - ரூபம், கந்தா - வாசனை,

சட்தா - சத்தம்; ரஸா – ரஸம்

உணர்ச்சியை இங்கு சேர்க்கப்படவில்லை. அது பதவி, தேய்வு, வாய்வுடன் சேர்ந்தது.

2 - வித குறி

14 - 15 இந்தி - பெண், புரிஸா - ஆண்

16,17,18 ஹிதயவாது இருதயம், ஜீவிதா - ஜீவன், ஆஹாரா - உணவு.

மேற்கூறிய 18-ம் சேர்ந்தவைக்கு (நிப்பன்ன ரூப) மென்னப்படும். இவை ஒருவன் கன்மத்தால் உண்டாக்கிக் கொண்டவை.

19 ஆகாசர் - ஆகாசம்

20 காயா விஞ்ஞாதி - சைகை

21 வசி விஞ்ஞாதி - பேச்சு

22 ரூபஸ்ஸ-லஹுதா - மிதக்குஞ் செயல்

23 ரூபஸ்ஸ-முதிதா - நெகிழ்ச்சி

24 ரூபஸ்ஸ - கம்மன்யதா - வளையத்தக்க செயல்

25 உபாஸயா - நிப்பன்ன ரூபத்தை அதிகரிக்கச்செய்யும் சக்தி அல்லது கர்ப்ப உற்பத்திக்குக்கூடப் போகிற சத்து.

26 சந்ததி - பிறக்கும்போது உதிக்கும் சத்து

27 ஜரதா - மூப்புக்குக் கொண்டுவந்து தளரச்செய்யும் சத்து

28 அநிஸ்ஸதா - இறப்பைத்தரும் சத்து</poem>}} இவை பத்தும் அனிப்பன்னா வென்னப்படும்.

4. நிப்பானம் 5

1. அபநீதா நிப்பானம், 2. அநுமெத்தா நிப்பானம், 3. சுஞ்ஞதா நிப்பானம் 4. சவுபாதிசேசா நிப்பானம் 5. அநுபாதிசேசா நிப்பானம்

1. யாவும் துக்கம், துக்கம் என சாதித்து அதனால் அடைவதே அபநீதா நிப்பானம்.

2. யாவும் அநித்யம், அநித்யம் என சாதித்து அதனால் அடைவதே அநுமெத்தா நிப்பானம்.

3. யாவும் அநாத்மா, அநாத்மாவென சாதித்து அதனால் அடைவதே சுஞ்ஞதா நிப்பானம்.

4. சகல பற்றுக்களையும் அறுத்துவிட்டு பஞ்சஸ்கந்தங்களராதிருப்பதே சவுபாதிசேச நிப்பானம்

5. பஞ்சஸ்கந்தங்களும் அற்று அதாவது இனி ஸ்கந்தங்களுடன் சேர்ந்து பிறவாதிருப்பதே அநுபாதிசேசா நிப்பானமென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! கந்தங்கள் இருவகைப்படும்.

1. ரூபகந்தா 2. நாமகந்தா

1. ரூபம் உருவத்தைச் சேர்ந்தவை யாவிற்கும் ரூபகந்தமென்றும்,

2. வேதனா கந்தா, சங்காரா கந்தா, சஞ்ஞா கந்தா, விஞ்ஞான கந்தா இவை நான்கும் சேர்ந்து நாமகந்த மென்னப்படும்.

இப்பஞ்சஸ்கந்தங்களின் சேர்க்கையே ஜீவன் மரணமடையுங்கால் இவ்வைந்தும் அழிந்து ஒருவனது கன்மமானது புதிய கந்தங்களுடன் சேர்ந்து பிறக்கின்றான். ஆகையால் கன்மத்தை ஒழித்தாலன்றி மறுபிறப்பை ஒழிக்கமுடியாது என்னும் உண்மெய்ப்பொருளை அவர்களுக்கு நன்கு தெளிவுர போதித்தார். அவைகளை செவிகுளிரக்கேட்ட அவர்கள் மனக்களிம்பு நீக்கியபின்னரும் அவர்களுக்கு கன்மத்தைப்பற்றி சில சந்தேகங்களிருக்கத் தெரிந்து பகவன் கன்மத்தைப்பற்றி போதிக்க ஆரம்பித்தார்.