பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /83

முற்றபோது எங்குந் தன்மத்தைப் போதித்துவந்தாரென்றும், பரிநிருவாண முற்ற போது தேகத்தை தகனஞ் செய்தார்களென்றுங் கூறியுள்ளபடியால் அஃதேதோ பெரும் ரகசியம் இருக்கின்றாப்போற் காணுகின்றது அதை பௌத்த குருக்களில் நன்கு தேர்ந்தவர்களையும் தற்கால (ஸைன்சில்) மிக்க ஆராய்ச்சியுள்ளவர்களையும் வைத்துக்கொண்டு விசாரிணைப் புரிய வேண்டுமேயன்றி மற்றப்படி யதின் ரகசியம் விளங்காதென்று சொல்லி நிறுத்திவிட்டு வேறு விவகாரங்களைப் பேசிக்கொண்டார்கள். மனதில் வேதாந்த விசாரிணையிற் பதிந்திருந்த பாடங்களெல்லாம் பரந்து நிருவாணமென்பதும், பரிநிருவாண மென்பதுமாய மொழிகளின்மீதிலேயே சங்கை தோன்றி தவித்து நிற்கின்றேன். தாங்களோ பெளத்ததன்மக் கொடியை எங்கும் நாட்டி சத்திய தன்மத்தை விளக்கிவருவதாகக் கேள்விப் பட்டுள்ளபடியால் தமக்கே எழுதி இச்சங்கையை விளங்கிக்கொள்ள வேண்டுமென்னு மாசையாலிக் கடிதத்தை வரையலானேன். அடியேன் மீதாயாசங் கொள்ளாது அவ்விரு மொழிகளின் தோற்றத்தையும் அதன் பொருளையும் விளக்கி அடிமையைப் புனிதனாக்கும்படி வேண்டும்.

வி. பாலசுந்திரம், மதுரை.

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கை மிக்க விசேஷித்ததேயாம். இச்சங்கையே மநுமக்களடையும் பதுமநிதி, தன்மநிதி, சங்கநிதியின் பயனாகும்.
அதாவது பதுமநிதியாம் செங்கமல பீடத்தமர்ந்த சற்குருவாம் புத்தபிரானையும், தன்மநிதி அவரது சாத்தியதன்மத்தைப் பின்பற்றியும், சங்கநிதி அவரது சங்கத்திற் சேர்ந்தும் அந்நிதியின் பயனால் ஞானசாதனம் புரிவோர் மட்டிலும் நிருவாணத்தின் அந்தரார்த்தத்தையும், பரிநிருவாணத்தின் அந்தரார்த்தத்தையும் அறிவார்களன்றி வாயாற் பந்தலிடும் ஏனையோர்கள் அறியமாட்டார்கள்.
அந்நிலையறிந்தே எம்.ஏ. அவர்களும் பௌத்த குருக்களைக் கொண்டே தெரிந்து கொள்ள வேண்டுமென முடித்துவிட்டார்.
ஆங்கில பாஷையில் எம்.ஏ. பரிட்சையில் தேறினவர்களாயினும் அதற்கு மேலாய பரிட்சையிற் தேறிய (ஸைன்ஸ்) பிரபசர்களாயினும் புறக்கருவி சேட்டைகளை அறிவார்களன்றிஅகக்கருவியின் சேட்டைகளை அறியவேயறியார்கள். அதனையறிந்தே விவேகமிகுத்த மேதாவிகள் "முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே யானந்த" மென வற்புறுத்திக் கூறியுள்ளார்கள்.
நமது தேசத்தில் பி.ஏ., எம்.ஏ செய்த (ஸைன்ஸ்) பிரபசர்களிருந்த போதினும் ஆங்கிலேயர்களால் புறக் கருவிகளைக்கொண்டாராய்ச்சி செய்து எழுதி வைத்துள்ளவைகளை சொல்லவும் செய்யவு முடையவர்களேயன்றி தாங்களே ஓரறிய வித்தையைக் கண்டு பிடித்து உலகோருக் குபகாரமாக விளக்கியது கிடையாது. தாம் கூறிய எம்.ஏ. அவர்கள் நிருவாணமென்பது கருவிகரண வமைதியென்றாரன்றி அவ்வமைதி நிலையையும் அறியாரென் பதே திண்ணம்.
தன்னிற்றானே உண்டாம் பசியாக்கினி, காமாக்கினி, கோபாக்கினியால் வெதும்பியும், மண், பெண் பொன்னென்னும் மூவாசாபாசக் கயிற்றால் கட்டுண்டும் உள்ள நிலைக்கு பாலிபாஷையில் (வாண )மென்றும், மண் பொன் பெண்ணென்னும் மூவாசாபாசக் கயிறுகளை அறுத்தெரிந்து காமாக்கினி, கோபாக்கினி, பசியாக்கினியாகிய மூன்றையு மவித்து தண்மெயாம் சாந்த சொரூபமுற்ற நிலைக்கு பாலி பாஷையில் (நிருவாண) மென்றும் கூறியுள்ளார்கள். ஆதியில் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் இத்தகைய நிருவாணமுற்ற பின்னரே அவரை காலகாலனென்றுங் காமதகன னென்றுங் கொண்டாடியவற்றை நாளதுவரையும் அநுசரித்துவருகின்றார்கள். சித்தார்த்தியார் பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரண துக்கம் நான்கையும் போக்க வேண்டுமென்று தனது சக்கிரவர்த்திப் பீடத்தைத் துறந்து வெளிதோன்றி ஓதுவாரின்றி தன்னிற்றானே உண்மெ யுணர்ந்து நான்குவகைத் துக்கங்களொழிந்த சுகவாருதி நிலையையே நிருவாண நிலையென்றார்கள். மூடியுள்ள வோடும் புளியம்பழமும் போலும், மூடியுள்ள