பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 29


விடை : அன்பரே, தாம் வினவியுள்ள சங்கை விசேஷித்ததேயாம். அதன் விவரந் தற்கால கற்பனா கதைகளுக்குப் பொருந்தியும், முற்கால சத்திய தன்மத்திற்கு மாறு கொண்டேனிற்கும். ஏனென்பீரேல், தற்காலம் தோன்றியுள்ள கற்பனா கதைகளோ விசாரிணையின்றி விரிந்தும் ஆராய்ச்சியின்றி அழிந்தும் வருகின்றது.

முற்கால சத்தியதன்மம் யாதெனில், சாக்கைய சக்கிரவர்த்தித் திருமகனாகும் சித்தார்த்தியவர்கள் பிறந்து வளர்ந்து வாலவயதிலேயே அதி தீவிர விசாரிணையிலும், ஜீவகாருண்ய போதனையிலும், உலக பாசபற்றற்றலு மாகிய செயலின் ஒழுக்கங்களையும் நாளுக்கு நாள் உணர்ந்த தந்தை மைந்தன் மீது சந்தேகமுற்று வாலவயதிலேயே மலையரசன் புத்திரியை மணம் புரிந்து தன் தேசத்திற்கருகிலுள்ளக் குன்றின் மீது இராஜகிரகமென்னும் சித்திர மாளிகை அமைத்து அதன் உள்ளுக்கு ஒருவரும் பிரவேசிக்கக்கூடாத பொன்மதில், வெள்ளி மதில், இரும்பு மதிலென்னு மும்மதில்களிட்டு அதனுள் தனது மைந்தனையும் மலையரசன் மகளையும் விடுத்து அவர்களை எக்காலும் ஆனந்த சுகனிலையில் வைக்கும்படியானத் தோழிப்பெண்கள் நால்வராம் அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்தமை என்பவர்களை நியமித்து வெளியில் நேரிடும் துக்க சங்கதிகள் உள்ளுக்குப் பிரவேசியாமலும், உள் சங்கதி வெளிக்கேகாமலுஞ் செய்து சுகபோகத்தில் வைத்திருந்தார்.

அவ்வகை ஆனந்தத்திலும், சுக போகத்திலும் வைத்திருந்தவர் தன்மெய் போல தன் தேசவாசிகளும் சுகத்திலிருக்கின்றார்களாவென்று அறிவதற் கெண்ணி ஊர்வலம் வருங்கால் மூப்பு, பிணி, சாக்காடென்னும் முத்தேகங் களைக் கண்டு இத்தகைய துக்கத்திற்காய எதிரடை சுகமிருத்தல் வேண்டும் அதைக்கண்டு உலக மக்களை ஈடேற்றவேண்டுமென்னுங் கருணையால் தனது குமரப்பருவத்தில் சக்கிரவர்த்திப் பீடத்தையும், மனைவி மைந்தனையு மறந்து துறவு பூண்டு கல்லால விருட்சமாம் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஐயிந்திரியங்களை வென்று காமனையும் காலனையும் செயித்து பற்றற்ற நிருவாணமுற்றதினால் சித்தார்த்தி திருமகனை ஐயிந்திரியங்களை வென்ற இ ந்திரரென்றும், அவரது மனைவியும் சங்கத்தைச் சார்ந்து ஐயிந்திரியங்களை வென்றபடியால் இந்திராணி என்றும், உலகிலுள்ள சருவ சீவர்களுக்கும் சத்குருவாகத் தோன்றி சங்கங்களை வகுத்து துக்க நிவர்த்தி உண்டாய் நட்சேத்திரமடையும் வானுலகிற்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் விளங்கியது கொண்டு வானவர்க்கரசனென்றும், தேவேந்திரனென்றும், இராஜேந்திரனென்றும், அவர் மனைவியை இந்திராணி என்றும், அவர் களுக்குத் தோழிப் பெண்களாயிருந்த அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த் தமை இவர்களையும் அவர்கட் சரிதையுட் கண்டு கொண்டாடி வந்த தேசத்தின் தன்ம சரித்திரங்களாகும் இவைகளே பூர்வத்தி லளித்தப்பெயர்களும், யதார்த்தத்தில் நடந்தேறிய நடவடிக்கைகளும் எனப்படும்.

-3:42; மார்ச் 30, 1910

44. அன்னிய மதங்களை தூஷித்தல்

வினா : ஐயா, நமது பெளத்த தன்மத்தைச் சார்ந்தோர் அன்னிய மதங்களை தூஷிக்கின்றார்களென்றும், பத்திரிகையிலும் அன்னியர் மதங்களை தூஷிக்கிறார் களென்றும் கூறக் கேழ்விப்பட்டு அவர்கள் பாற் சென்று பௌத்தர்கள் எந்த பத்திரிகையில் எம்மதத்தை எவ்வகையாக தூஷித்திருக்கின்றார்களென்று கேட்டால் நீங்களே பார்த்துக்கொள்ளுங் கோளென்றுபதிற் சொல்லுகிறார்களன்றி இதோ தூஷணமொழியைப் பாருங்கோளென்று காண்பித்தாரில்லை. இவ்வகையாக மொழிந்தார் களென்று கூறினாருமில்லை.

ஆதலின் யாதுவாக்கியங்களைக்கொண்டு இவ்வகை மொழிந்து வருகின்றார்களென்பது அடியேனுக்கு விளங்காததினால் அவற்றை நமதரிய பத்திரிகையில் விளங்கியருளும்படி வேண்டுகிறேன்.

ஒர் தன்மப்பிரியன், சென்னை .

விடை : ஓர் தன்மப்பிரியரென்னும் அன்பரே, தாம் வினவிய சங்கை வீணர்கள் வங்கையேயாம். அதாவது உலகெங்குமுள்ள விவேகிகளாற்-