பக்கம்:அறப்போர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பாராட்டுகிறதே! இங்கே பழகிய பிறகு மற்ற இடங்களிலே தங்கும் ஆசை வருமா? புலவர் என்றால் பல இடங்களுக்குப் போய் வரவேண்டி இருக்கலாம். ஆனாலுைம் அவர்களுடைய உள்ளம் வரிசை அறிந்து பாராட்டும் கிள்ளிவளவரிடந்தான் இருக்கும்.

வளவன்: அந்த அந்த நாட்டிலே உள்ள புலவர்கள் அந்த அந்த நாட்டில் உள்ள அரசர்களே மதித்து வாழ்த்துதல் இயற்கைதான்.

புலவர்: மற்றக் குடி மக்கள் அவ்வாறு எண்ணுவது இயற்கையே. ஆனால் பரிசிலர்களாகிய புலவர்கள் அத்தகையவர்கள் அல்லர். அயலார் வீட்டில் இருப்பதானுலும் மல்லிகைப் பூ மல்லிகைப் பூத்தானே? ஆகவே பிறநாட்டு மன்னராயினும் செல்வராயினும் அவர்கள் தகுதியை வெளிப்படையாகப் பாராட்டுவது புலவர்கள் கடமை. அன்றியும் அவர்களுக்குத்தான் எல்லா நாடுகளும் சொந்த நாடு ஆகுமே!

வளவன்: தாங்கள் வேறு ஏதோ நாட்டில் அத்தகைய சிறந்த புரவலரைக் கண்டு, அதுவே சொந்த நாடு போல எண்ணித் தங்கி விட்டீர்களோ?

புலவர்: வேறு நாடுகளுக்குச் சென்றபோது அதற்கு மாறான உண்மை.ஒன்றை உணர்ந்-

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/102&oldid=1265908" இலிருந்து மீள்விக்கப்பட்டது