பக்கம்:அறப்போர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


வாழ்த்தலாம். நீடுழி வாழவேண்டுமென்று வாழ்த்தலாம். புலவர் அவன் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்த விரும்பினார். பல ஆண்டுகள் என்பதற்கு ஓர் உவமையைச் சொல்ல நினைத்தார். வானத்தில் தோன்றும் மீன்கள் கணக்கற்றவை; அவற்றைப் பன்மைக்கு உவமையாகச் சொல்வது மரபு. மழை பெய்யும்போது உண்டாகும் மழைத் துளிகளும் பல; அவற்றையும் சொல்வதுண்டு. கடல் மணல், ஆற்று மணல் ஆகியவற்றை எண்ணி முடியாது; அவற்றையும் பன்மைக்குச் சொல்வதுண்டு. நெட்டிமையார் ஆற்று மணலைச் சொல்ல வருகிறார்.

சோழன் ஒருவனே வாழ்த்த வந்த புலவர் ஒருவர் அவனுடைய நாட்டில் உள்ள காவிரியாற்றின் மணலைவிடப் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

சிறக்ககின் ஆயுள்
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே.

இங்கே நெட்டிமையார் பாண்டிய மன்னன் வாழ்த்துகிறார். ஆதலின் பாண்டி நாட்டிலுள்ள ஆற்றிலிருக்கும் மணலைச் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் பாண்டி நாட்டில்

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/51&oldid=1267428" இலிருந்து மீள்விக்கப்பட்டது