பக்கம்:அறப்போர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


அப்பாலும் ஒரு கடல்கோள் நிகழ்ந்தது. பாண்டியர்கள் பின்னும் வடக்கே வந்து ஒரு நகரை அமைத்துக் கொண்டு தம் பழம்பதியாகிய மதுரையின் பெயரையே அதற்கு இட்டு வழங்கினர். அங்கே கடைச்சங்கத்தை நிறுவி வளர்த்தனர். முதுகுடுமிப் பெருவழுதி அந்தக்காலத்தில் வாழ்ந்தவன்.

புலவர், வடிம்பலம்ப நின்ற பாண்டியனையும் அவன் காலத்தில் பாண்டி நாட்டிலே ஒடிய பஃறுளியாற்றையும் நினைத்தார். "நீ பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!" என்று முதுகுடுமியை வாழ்த்தினார். நெடியோனாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய பஃறுளியாற்று மணலைப் போல வாழ்வாயாக என்று அந்தப் பழம் பாண்டியனையும் தொடர்புபடுத்தினார். அவன் சிறப்பையும் சிறிது சேர்த்துச் சொல்லுகிறார்.

அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒரு குலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும் யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்-

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/55&oldid=1265861" இலிருந்து மீள்விக்கப்பட்டது