பக்கம்:அறப்போர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பருவத்துப் பெண்கள் அவர்கள்; வால் இழை மடமங்கையர். அரிமயிர்த் திரள் முன்கையை நீட்டி அவர்கள் பூவைக் கொய்கிறார்கள். வரிவரியாகக் கீறிக் கோலஞ் செய்த மணலிலே அமைத்த பாவைக்காக வளைந்த கொம்புகளிலிருந்து பூவைக் கொய்து சூட்டுகிறார்கள். சிறிது நேரம் இப்படி விளையாடிய பிறகு தண்ணிய நீர் சலசலவென்று ஓடும் பொருநை நதியிலே பாய்ந்து ஆடுகிறார்கள்.

மணலிலே ஓடியாடியும் சிற்றில் இழைத்தும் பாவை வனேந்தும் அதற்குப் பூச்சூட்டியும் விளையாடிய விளையாட்டினல் பெற்ற இளைப் பானது கண்ணிய பொருகை நதியிலே ஆடுவதனால் போய்விடுகிறது.

பெண் புலவர் ஆதலின் வஞ்சிமா நகரில் உள்ள பிறருடைய செயலை நினைக்காமல் பெண்களுடைய விளையாட்டையே நினைத்தார். ஆற்றல் அழகு பெற்ற நகர், அழகு மலிந்த பெண்களால் எழில் பெற்ற நகர், உடல் வளமும் செல்வ வளமும் பெற்ற இளம் பெண் கள் கவலை ஏதும் இன்றி விளையாடி மகிழும் நகர் என்றெல்லாம் விரிவாக நினைக்கும்படி இந்தக் காட்சியைக் காட்டினர்.

இவ்வாறு மடமங்கையர் பொருநைப் புனலிலே பாயும் வஞ்சிமா நகரம் விண்ணேமோதும்

46
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/64&oldid=1267433" இலிருந்து மீள்விக்கப்பட்டது