பக்கம்:அறப்போர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கண்ட காட்சிகளும் கேட்ட செய்திகளும் இத்தகைய விமரிசனத்துக்கு அடிப்படையாக இருந்தன.

ருநாள் சேரமான் தலைநகரமாகிய வஞ்சிக்குச் சென்றிருந்தார். காணார், கேளார், கால் முடப் பட்டோர், பிணியாளர் ஆகியவர்களைப் பாதுகாக்கும் ஆதுலர் சாலைக்குப் போனார். அறம் கொழுந்து விடும் அவ்விடத்திற்கு அவர் போன பொழுது அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கும்படி செய்து விட்டது. அரசனே அங்கே வந்து ஒவ்வொரு வரையும் தனித் தனியே விசாரித்துக் கொண்டிருந்தான். தாய் தன் குழந்தைகளிடம் அன்போடு பேசும் நிலையைப் புலவர் எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தார். முன்னே அரசன் ஈர நெஞ்சத்தின் பெருமையை உணர்ந்து பாராட்டியவர்களின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. இப்போது புலவரே நேரில் அரசனது ‘ஈர நெஞ்சத்தின் இயல்பைக் கண்டார்.’ இவர் கல்விக்குத்தான் அளவில்லை என்று எண்ணினோம். இவருடைய ஈர அன்புக்கும் எல்லை இல்லை போலும்!' என்று அறிந்து விம்மிதம் அடைந்தார்.

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/80&oldid=1267449" இலிருந்து மீள்விக்கப்பட்டது