பக்கம்:அறப்போர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்



ரசர்கள் பிறர் நாடுகளை வெளவி அவற்றால் வரும் பயன்களை நுகர்பவர்கள். அதனால் பிறர் மண்ணை உண்ணுபவர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். பூபுக் என்று வட மொழியில் ஒரு தொடர் மன்னர்களுக்கு வழங்கும். மண்ணை உண்போர் என்பது அதன் பொருள். சேரமான் தன்னுடைய பேராற்றலால் பகைவரை ஒடுக்கினான். மிக்க திறமையை உடைய வீரர்கள் பலரோடு பகைவர்கள் வந்தாலும் அந்த வயவர்களை மாய்த்துப் பகைவரைக் தேய்த்து அவர்கள் காட்டைத் தனதாக்கிக் கொள்ளும் பெருவீரம் படைத்தவன் அவன்.

பிறர் மண் உண்ணும் செம்மல் சேரமான். ஆனல் அவன் நாட்டை யாரும் கைப்பற்ற இயலாது. அவன் மண்ணை யாரும் உண்ணமுடியாது. பகைவர் உண்ணுதற்கு அரிய பெருமையை உடையமண் அது. ஆனால் அந்த மண்ணை உண்பவர்கள் இருக்கிறாரர்கள். அவர்கள் பகை வேந்தர்கள் அல்ல; வீரர்கள் அல்ல; ஆடவர்களே அல்ல; பெண்கள். ஆம், சேரநாட்டில் வாழும் பெண்களை அந்த மண்ணை உண்பார்கள். எல்லாப் பெண்களும் அல்ல; கருவுற்ற பெண்கள் மயற்கை யுடையவர்களாய் மண்ணை உண்ணுவார்கள்; வேட்டு உண்ணுவார்கள். வயவுற்ற மகளிர் வேட்டு உண்ப

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/87&oldid=1267455" இலிருந்து மீள்விக்கப்பட்டது