பக்கம்:அறவோர் மு. வ.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
II
நினைத்துப் பார்க்கிறேன்

திருமால் வாமனனாக வந்து ஈரடியால் இம்மண்ணையும் விண்ணையும் அளந்தார் என்பது. மு. வ. என்ற ஈரெழுத்தால் தமிழ் நெஞ்சங்களைத் தம் எளிய எழுத்தால் உயரிய சிந்தனையால் ஈர்த்தவர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் ஆவர். பள்ளி இறுதித் தேர்வு மட்டுமே வகுப்பில் அமர்ந்து படித்துத் தேறிய அவர், பின்னாளில் அமெரிக்க நாட்டின் கல்லூரியொன்றில் 'டி.லிட்'. சிறப்புப் பட்டம் பெறும் அளவிற்குத் தம்மைக் கல்வியாலும், பண்பாலும், தகுதியாலும், புகழாலும் ஒருவர் வளர்த்துக் கொண்டார் என்பது அவரைப் பொறுத்தவரையிலும் பொருந்தும் பொன்மொழியாகும்.

அவர் பிறந்த வேலம், வாலாசா ரோடு எனும் ரயில் நிலையத்தை யடுத்த சிற்றூராகும். அவர் பரம்பரையில் எவரும் உயர்கல்வி படித்திருக்கவில்லை என்பது மட்டு மல்ல; எளிய உழைப்பினைக் கூட அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை. அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த என் ஆசிரியர் மு. வ. அவர்கள் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவராகப் பின்னாளில் மிளிர்ந்தார். என்பது மட்டுமல்ல, தாம் பெற்ற மூன்று மக்களையும் மருத்துவத்துறையில் முன்னுக்கு வரச் செய்ததோடு, அத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/132&oldid=1224203" இலிருந்து மீள்விக்கப்பட்டது