பக்கம்:அறவோர் மு. வ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அறவோர் மு. வ.

பிறகே டாக்டர் மு. வ. வின் 'பாவை’ எனும் நாவல் 'லோகோபகாரி' என்ற இதழிலும், 'அந்த நாள்’ எனும் நாவல் தமிழ் முரசு என்ற இதழிலும் வெளியாயின. ஏனைய பன்னிரண்டு நாவல்களும் முழுநூல் வடிவம் பெற்றே இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிறைவைத் தந்தன.

இன்றைய படைப்பிலக்கியங்களைக் கலைப்படைப்புகள் என்றும் ஆய்வுப் படைப்புகள் என்றும், இருவகையாகப் பிரித்துக் காணலாம். கலைப்படைப்புகளில் உணர்ச்சிகள் தலைமையேற்கும். ஆய்வுப் படைப்புகளில் நுண்மாண் துழைபுலத்தன்மைகள் தலைமையேற்கும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றி பெறுவது கடினம். ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவது மிகக் குறைவு. ஆனால் டாக்டர் மு. வ. கலைப்படைப்பாளராகவும். ஆய்வுப் படைப்பாளராகவும் திகழ்ந்தார். ஆய்வுப் படைப்பாளராகிக் கண்ட வெற்றியே கலைப்படைப்பின் கட்டுக்கோப்புக்குத் துணை நின்றது எனலாம். இலக்கிய வரலாற்றில் டாக்டர் மு. வ. வின் தோற்றம் தனித் தன்மையோடு விளங்குவதற்கு இச்சிறப்பும் காரணமாகும்.

கலைமணம் கொண்ட சமுதாயச் சிந்தனையின் வார்ப்பாக விளங்கிய மு. வ. வின் நாவல்கள் தமிழ் நாவல் வாழ்விற்கு உணர்வூட்டியுள்ளன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை ஆழ்ந்து நோக்குவதுதான் புத்திலக்கியத்தின் போக்கு என்பதை உணர்ந்து தம் நாவல்களைப் படைத்தார். மு. வ. விற்கு முன்பே சமுதாயத்தின் புறப் போராட்டங்களைப் பற்றி எண்ணற்ற எழுத்தாளர்கள் நாவல்களைப் படைத்திருந்த போதிலும், மு. வ. வின் நாவல்கள் புறப்போராட்டங்களோடு, அகவாழ்வு சிக்கல்களையும் ஆழ்ந்து நோக்கியுள்ளன. சமுதாயத்தின் சிக்கல்களைக் கருப்பொருளாக்கி அதை மட்டும் சித்திரித்துப் படிப்பாளரின் சிந்தனைக்கு முடிவை விடும் எழுத்தாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/67&oldid=1210067" இலிருந்து மீள்விக்கப்பட்டது