பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
341

high pressure cylinder : உயர்அழுத்த நீள் உருளை: கொதிகலனிலிருந்து நீராவியை நேரடியாகப் பெறுகிற ஒரு கூட்டு எஞ்சினின் மிசச்சிறிய நீள் உருளை. இந்த நீள் உருளையில், நீராவி முதலில் விரிவாக்கப்பட்டு, பின்பு அடுத்துள்ள குறைந்த அழுத்த நீர் உருளைகளுக்குள் செலுத்தப்படுகிறது

high relief :வன்புடைப்பு:மெய்வடிவத்திலிருந்து மிகுதி அடுத்துள்ள அளவானபுடைப்புச் செதுக்கம்

higher resistance :(மின் உயர் மின்தடை :வழக்கமான அழுத்த அளவுடைய மின்னோட்டத்தில் முழு அளவு மின்னோட்டம் பாய்வதைத்தடையுறுத்தும் துரு, அரிமானம் போன்ற வினைகள்

high speed : (தாளி) மிகைவேகம்: சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம்

high speed line printer : (கணிப்.) அதிவேக வரி வாரி அச்சடிப்பான்

high speed print: (கணிப்.) அதிவேக அச்சடிப்பு

high speed skipping : (கணிப்.) அதிவேகத்தில் தாவிச் செல்லுதல்

high speed steel: மிகைவேக எ.கு:எஃகின் வெட்டுந்திறனை அதிகரிப்பதற்காக டங்க்ஸ்டன் அல்லது மாலிப்டினம் சேர்க்கப்பட்ட எஃகு. இந்த எஃகினால் செய்த கருவிகளை, சாதாரண கார்பன் எஃகினாலான கருவிகளைவிட மிகுதியான வேகத்தில் சேதம் ஏதுமின்றி இயக்கலாம்

high spots : (எந்) மிகைக் கறைகள் : (1) சமதளப் பரப்புகளிலுள்ள களங்கக் கறைகள். அப்பரப்புகளை முற்றிலுமாகச் சமதளப்படுத்துவதற்காக இக்கறைகளைச் சுரண்டி அல்லது தேய்த்து அப்புறப்படுத்தப்படுகின்றன

(2) உண்மையான சமதளத்திலிருந்து நீட்சியாகவுள்ள இடத்தின் பரப்பளவு

high technology printers :(கணிப்.) உயர்நுட்ப முறை அச்சடிப்பான்கள்

high tension : (மின்)உயர்மின்னழுத்தம் : உயர்ந்த அளவு மின்னழுத்தம் அல்லது மின்னியக்கு விசை

high test fuel : (தாளி) மிகைச்சோதனை எரிபொருள்: 75க்கு அல்லது அதற்கு அதிகமான ஆக்டேன் வீத அறுதிப்பாடுடைய கேசோலின் எரிபொருள்

high voltage: (தாளி.எந்) மிகை மின்னழுத்தம் : (1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும்

(2) சுடர் மூட்டக்கம்பிச் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்பட்ட மின்னழுத்தம். இந்த மின்னழுத்தம் பகிர்ந்தளிப்பான் வழியாக்ப் பொறிவினைச் செருகிக்கு அனுப்பப்படுகிறது

highway engineer : நெடுஞ்சாலை பொறியாளர் ; நவீன நெடுஞ்சாலைகளின் பொறியியல் பணி, வடிவமைப்பு, கட்டுமானம் ஆகிய்வற்றைத் திட்டமிடும் வல்லுநர்