பக்கம்:அறிவியல் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acr

13

ada


டரி), மிகுதியாகச் சுரப்பதால் வயது வந்தோரிடத்துக் கன்ன எலும்புகளும் தாடை எலும்புகளும் முனைப்பாக வளர்தல். (உயி)

acropetal - நுனி நோக்கிய: முனை நோக்கிய இயக்கம். பூக்களின் வளர்ச்சி நுனி நோக்கியது. (உயி)

ACTH - adrenocoticotrophic hormone, Ecorticotrophin - ஏ.சி.டி.எச். அடினோகார்கோட்ராபிக் ஆர்மோன், கார்டிகோட்ராபின்: முன் பிட்யூட்ரியின் சுரப்பு. மூச்சிழுப்பு, கீல் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்த ஊசி மருந்தாகப் பயன்படுவது. (உயி)

actinium - ஆக்டினியம்: Ac. நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். ஆல்பா துகள்களின் ஊற்றுவாய். (வேதி)

actinoids - ஆக்டினாய்டுகள்: 15 கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட தொகுதி கதிர்மங்கள் என்று கூறலாம். (வேதி)

actinometer - கதிர்வீச்சுமாணி: கதிர்வீச்சுச் செறிவை அளக்குங் கருவி. (இய)

actinomorphy- ஆரச் சமச்சீர்: ஆரச்சமச்சீர் உள்ள பூ. எ-டு. தாமரை, வெங்காயம். பா. radial symmetry. (உயி)

actinomycosis - ஆக்டினோ மைக்கோசிஸ்: ஆக்டினோ மைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சியத்தினால் (பாக்டீரியத்தினால்) உண்டாகும் கால்நடை நோய். துரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ் வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும். (உயி)

actinotherapy - கதிர்ப் பண்டுவம்: புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துதல். (மரு)

active site - விளைமிகுபுலம்: வினையூக்கி மேல்பரப்பில் வினை நிகழுமிடம். (வேதி)

active transport - வினைமிகு போக்குவரவு: உயிரணுக்களில் படலங்கள் வழியாகப் பொருட்கள் வெளியே செல்லுதலும் உள்ளே வருதலும். (உயி)

activity. 1. கதிரியக்கம்: ஒரு கதிரியக்கப் பொருளில் ஓரலகு நேரத்தில் சிதைவுறும் அணுக்களின் சராசரி எண்ணிக்கை. 2. வினைப்பாடு: செயற்பாடு. (இய)

acuminate - நீள்கூர் நுனி: எ-டு. அரசிலை. (உயி)

acute - கூர் நுனி: எ-டு. மாவிலை. (உயி)

Adam's apple - குரல்வளை மணி: ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம். (உயி)

adaptation - தகைவு: உயிரிகள் தம் சூழ்நிலைக் கேற்பச் செயற்படுதல் இது உறுப்பு நிறம் முதலிய