பக்கம்:அறிவியல் அகராதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



exp

155

ext


expansivity - விரிவெண்: விரிவுத்திறன். வெப்பப் பெருக்கத்திற்கு ஒரு பொருள் உட்படும் நிலையின் அளவு. இது நீள் விரிவெண், கனவிரிவெண் எனப்பல வகைப்படும். (இய)

expiration - வெளிமூச்சு: இதனைப் புறமூச்சு எனலாம். இதில் ஆக்ஸிஜன் குறைந்த காற்றும் நீராவியும் நுரையீரல்களிலிருந்து வெளியேறுபவை. ஆகவே, இது கழிவகற்றும் செயலாகும். ஒ. inspiration. (உயி)

Explorer - எக்ஸ்புளோரர்: ஆராய்வி, 1958இல் அமெரிக்கா முதன்முதலில் ஏவிய செயற்கை நிலா. (இய)

explosion - வெடித்தல்: விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும்பொழுது ஏற்படும் உடன்வெடிப்பு கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்ற வைக்கும் பொழுது, அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை. இவ்விசை யினாலேயே வெடித்தல் ஏற்படுதல். எ-டு. சீனிவெடி வெடித்தல். (வேதி)

explosives - வெடிமருந்துகள்: விரைவான வேதி வினைக்குட்பட்டு வெப்பத்தையும் அதிக அழுத்தத்தையும் உண்டாக்கும் பொருள்கள். உண்டாக்கும் வளியின் பருமன் வெடிக்கும் மூலப்பொருளின் பருமனை விட அதிகம். எ-டு. துப்பாக்கித்தூள், செல்லுலோஸ், நைட்ரேட், நைட்ரோகிளிசரின், டி.என்.டி. ஆர்.டி.எக்ஸ் (வேதி)

expression - கோவை: குறிகள் எண்கள் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. எ-டு.

a- முடுக்கம் V-நேர்விரைவு U-தொடக்க நேர்விரைவு. t- வினாடி. (இய)

extensometer - விரிவுமானி: ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி, அது உண்டாக்கும் விரிவை அளக்கப் பயன்படுங் கருவி. (இய)

extensors - நீட்டுத்தசைகள்: உடலின் எப்பகுதியையும் விரிக்க அல்லது நீட்டப் பயன்படுந்தசை. எ-டு முத்தலைத்தசை. (உயி)

external combustion engine - புறக்கனற்சி எந்திரம்: நீராவி எந்திரமாகும். இதில் எரி பொருள் (நிலக்கரி) வெளியில் தீயெரிபெட்டியில் எரிகிறது. இதில் இரு நிலைகளில் இரு குழாய்கள் வழியாக நீராவி மாறி மாறிச் செல்வதால், தண்டு முன்னும் பின்னும் இயங்க, அதனோடு இணைக்கப்பட்ட உருளையும் இயங்குவதால், எந்திரமும் இயங்கத் தொடங்கும். இதில் நீராவி ஆற்றல் எந்திர ஆற்றலாகிறது. ஒ. internal combusion engine.(இய)