பக்கம்:அறிவியல் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alg

19

all


algae - பாசிகள்: பச்சையமுள்ளதால் ஒளிச்சேர்க்கை நடத்துபவை. உடல் ஒற்றைக் கண்ணறையாலானது கண்ணறை அமைப்பே மூச்சு விடுதல், கழிவகற்றல், இனப் பெருக்கம் செய்தல் முதலிய வேலைகளைச் செய்யப் பயன்படுவது. பெரும்பான்மை நீரில் வாழ்பவை 25,000க்கு மேற்பட்ட வகைகள் உண்டு. எ-டு. கிளமிடோமோனாஸ். (உயி)

algebra - இயற்கணிதம், குறிக் கணக்கு: குறிகள், குறிபாடுகள் மூலம் எண்களின் நுண்மைப் பண்புகளை ஆராயுந்துறை. (கண)

algology - பாசியியல்: பாசிகளை ஆராயும் உயிரியல் துறை. (உயி)

algorithm- வழிமுறை. இது விதிமுறைகள் வழிப்பட்ட நடைமுறை. சிறப்பாகக் கணிப்பொறி அறிவியலில் பயன்படுவது. இது சிக்கலுக்குத் தீர்வுகாண உதவும் நுணுக்கமுமாகும். (கணி)

alimentary canal - உணவு வழி: இது வாயில் தொடங்கிக் கழிவாயில் முடிவது. முதன்மையாக உணவு செரிக்கப்படுவது. (உயி)

alkali - காரம்: நீரில் கரையக்கூடிய வீறுள்ள உப்பு மூலி. கரிப்பு. காரச்சுவை, காடியுடன் சேர்ந்து உப்பைக் கொடுத்தல், சிவப்புப் பூஞ்கத்தாளை நீலமாக்குதல் முதலியவை இதன் பண்புகள். ஒ acid. (வேதி)

alkali metals - கார உலோகங்கள்: தனிமவரிசை அட்டவணையிலுள்ள முதல் தொகுதித் தனிமங்கள் : லித்தியம், சோடியம் முதலியவை. (வேதி)

alkaline earth metals - காரப்புவி உலோகங்கள்: தனிம வரிசை அட்டவணையில் இரண்டாந் தொகுதித் தனிமங்கள். கால்சியம், பேரியம். மக்கனீசியம் முதலியவை. (வேதி)

allantois. பூழ்ப்பை: பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் முச்சுவிடுவதற்காகக் கருவில் காணப்படும் படலம். (உயி)

alleles, allelomorphs - இணை மாற்றுகள்: இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் (ஜீன்கள்) ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல். (உயி)

allergy - ஒவ்வாமை: தூசி, தூள் முதலிய ஒவ்வாப் பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல். (மரு)

allobar - அல்லோபார்: இயற்கையில் இல்லாத ஒரு தனிமத்தின் ஒரிமங்களின் (ஐசோடோப்புகளின்) கலவை. (வேதி)

alloy - உலோகக்கலவை: உலோகம் உலோகத்துடனோ, உலோகம் மற்றொரு அலோகத்துடனோ சேர்ந்து உண்டாவது. எ-டு. இன்வார். பித்தளை, வெண்கலம். (வேதி)

allograft - அயலொட்டு: ஒர்