பக்கம்:அறிவியல் அகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ker

230

kil


அளவுப் பரப்பைக் கடக்கும். 3. கதிரவனைக் கோள் சுற்றிவரும் காலத்தின் (T) இருமடிப் பெருக்கமும் (T2) கதிரவனுக்கும் கோளுக்குமிடையே உள்ள தொலைவின் (d) மும்மடிப் பெருக்கமும் (d3) நேர்வீதத்தில் இருக்கும், அதாவது T2 ∝ d3 . இம்மூன்று விதிகளையும் கெப்ளர் (1571-1630) என்பார் 1610இல் வகுத்தார். ஐகோ பிரெகி (1546-1610) மேற்கொண்ட உற்றுநோக்கல்களின் அடிப்படையில் இவற்றைக் கெப்ளர் நிறுவினார். (இய)

kerosene - மண்ணெண்ணெய்: பண்படாப் பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடிக்கக் கிடைக்கும் பாரபின் அய்டிரோ கார்பன். நீர்ம எரிபொருள், கரைப்பான். (வேதி)

kidney disease gene - சிறுநீரக நோய் மரபணு: இது 9 ஆண்டு அரிய ஆராய்ச்சிக்குப் பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி சிறுநீரக நோயைப் போக்க உதவும். (உயி)

kidneys - சிறுநீரகங்கள்: அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்கள் சிறுநீர்ப்பையை அடைகின்றன. சிறுநீர்ப்பை சிறுநீர் அகற்றியோடு தொடர்புடையது. இறுதியாகச் சிறுநீர் வெளியேறும் பகுதி சிறுநீர் அகற்றி. (உயி)

kilocycle - கிலோசைக்கிள்: அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு. (இய)

kiloton bomb - கிலோடன் (பாம்): அணுக்கருக்குண்டு. இதன் வெடி திறன் 4 x 1012 ஜூல்களுக்குச் சமமானது. இது ஓர் அணுக் குண்டே. (இய)

kilovolt - கிலோஓல்ட்: அலகுச் சொல். மின் அழுத்த வேறுபாட்டின் அலகு. 1000 ஓல்ட்டுகள். (இய)

kilowatt hour - கிலோவாட்டுமணி: வாட்டு வினாடி என்பது மிகச் சிறிய அலகு. ஆகவே, வாட்டு மணி அலகாகக் கொள்ளப் பட்டுள்ளது. 1 வாட்டு மணி என்பது 1 வாட்டுத்திறனை 1 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவதாகும். இது சிறியதாக உள்ளதால் நடைமுறையில் கிலோ வாட்டு மணி பயன்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ வாட்டு (1000 வாட்டுகள்) செலவழிந்தால் அது ஒரு கிலோ வாட்டுமணி. இதை யூனிட்டு என்றும் கூறலாம். (இய)

kilowatt meter - கிலோவாட்டு மானி: இது மின்னாற்றலை அளக்கும் கருவியமைப்பு. கிலோ வாட்டு அளவில் திறன் மட்டுமின்றி மின்னாற்றல் செலவிடப்படும் நேரமும் இதில் அளக்கப்படுகின்றன.