பக்கம்:அறிவியல் அகராதி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pro

347

pro


process - செயல்முறை: கணிப்பொறியைப் பயன்படுத்திக் கட்டளைத் தொகுதி வழியாகத் தகவல்களைப் பகுத்தல். 2. ஒரு பொருளைத் தயாரிக்கும் முறை: ஈயஅறைமுறை. 2. எலும்பு முள்: எலும்புநீட்சி. ஒ. eminence. (ப.து)

processor - செயல்முறையாக்கி: செயல்முறைப்படுத்தி. மைய முறையாக்கு அலகு. எ-டு நுண் செயல் முறையாக்கி. (இய)

procumbent stem - நிலம்படர் தண்டு: வெட்டுக்காயப்பூண்டு. (உயி)

proctodaеum - பிற்குடல்: பின் புறத்தேயுள்ள குடல்.

product - விளைபொருள்: வேதி வினையில் உண்டாகும் புதிய கூட்டுப்பொருள். மக்னீசியத்தைக் காற்றில் எரிக்க மக்னீசியம் ஆக்சைடு உண்டாகும். (வேதி)

profundal - நீரடி: ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குறைந்த உயிர்வளியைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவை. தவிர, வெப்பநிலையும் பிஎச் மதிப்பும் குறைவாகவே இருக்கும். ஒ. littoral. (இய)

programme - l. நிகழ்ச்சிநிரல்: அழைப்பிதழில் உள்ளது. 2. நிகழ்நிரல்: குறிப்பிட்ட மொழியில் எழுதப்பெறுங் தொகுதி. கணிப்பொறி புரிந்து கொள்ளும் அளவுக்கு அதனைப் பெயர்ப்பு செய்யலாம். கணிப்பொறியின் மென்னியம். (ப.து)

programmer-நிகழ்நிரலர்: கணிப் பொறிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவர். 2 நிகழ்ச்சி அமைப்பாளர்: வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரப்புவதற்குரிய நிகழ்ச்சிகளை நிரல்படுத்துபவர். (இய)

progressive waves - முன்னேறு அலைகள்: இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது. அலை இயக்கம் அதிர்வு மூலத்திற்கு எந்நிலையிலும் திரும்புவதில்லை. அது தொடர்ந்து ஒரே திசையில் ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த துகள்கள் தொடர்ந்து அதிர்வதால், அது பரவ முடிகிறது. எ-டு. நீரலைகள் (இய)

projectile - வீழ்பொருள்: எறியப்படும் அல்லது வீழ்த்தப்படும் பொருள். வீழி. பா. balistics. (இய)

projection - 1. வெளிப்பாடு: நம் விருப்பங்களும் உளவெழுச்சிச் சிக்கல்களும் பிறரிடம் இருப்பனவாக எண்ணிச் செயற்படல். தகைக்கேட்டின் ஒரு வகை விளைவு. 2. வீழல். (ப.து)