பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழிலுடை இருசுடர் தோற்றம் 25

கொழுநனாகிய தன்னைப் பிரியப் பெற்றதனால் நிலை குலைகின்ற நெஞ்சத்தில் சோகத்தையுடையவனாகக் காணப்பெறுகின்றன செந்தாமரைகள். தலைவி முகம் மலரத் தலைவன் தோன்றின துபோல் தாமரைகள் மலரக் கதிரவன் தோன்றினான் என்ற செய்தி நயம்பட உரைக்கப் பெற்றிருத்தலைக் கண்டு தெளிக.

வெய்யோன் ஒளி பரந்து விரியும் காட்சி அடுத்து அற்புதமாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. அம்பலவன் ஆனந்தத் திருநடனம் புரியுங்கால் அவனுடைய திருச் சடைகள் விரித்து பரந்து காணப்பெறுவதுபோல் கதிர்கள் விரித்துபரவும் நிலையில் கதிரவன் காணப்பெறுகின்றான் என்ற ஒப்புமை நம் நெஞ்சை அள்ளுகின்றது. பாடலைக் காண்போம்.

"எண்ணரிய மறையினொடு கின்னரர்கள்

இசைபாட உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரங்குவிப்ப வேலை என்னும் மண்ணுமணி முழவதிர வாணரங்கில் நடம் புரீலான் இரவி யான கண்ணுதல்வா னவன்கன்கச் சடைவிரித்தால்

என விரிந்த கதிர்கள் எல்லாம்.' (எண் அரிய-அளவிடுதற்கு அருமையான, மறை-வேதம்; ஏத்த-துதிக்க; விண்ணவர்-தேவர்; வேதியர்-அந்தணர்; கரம் குவிப்ப-கைகூப்ப; வேலை-கடல்; மன்னும் ஆணி. மார்ச்சனை அமைந்த; முழவு-மத்தளம்; அரங்கு-நடன சபை, வாள் இரவி-ஒளியையுடைய கதிரவன்; கண்ணுதல்நெற்றிக்கண், கனக சடை.பொன்னிறமான சடை; விரிந்த-பரவின.)

3. கம்பரா. பாலகா. மிதிலைக் காட்சி, 153,

அ.த-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/27&oldid=534046" இலிருந்து மீள்விக்கப்பட்டது