பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மின் கடிகாரங்கள் :

அண்மைக் காலத்தில் மணிப்பொறியியலில் மின் ஆற்றலைப் பயன்படுத்தி நான்கு முறைகளில் கடிகாரங்களை இயக்குகின்றனர்.

முதல் வகையில் அரை நிமிடத்திற்கு ஒரு முறை ஊசல் வட்டத்திற்கு ஆற்றலளிக்கப் படுகிறது. ஊசல் தண்டு பதினைந்து பற்களையுடைய பல் உருளை. இவ் உருளை இயங்கும் போது, அதன் பின்னால் உள்ள ஓர் ஊசி பூட்டை விலக்கி, ஒர் இடத்தை மையமாகக் கொண்டு சுழலக் கூடிய நெம்புகோலின் புயத்தை விடுவிக்கிறது.

இது ஊசல் தண்டோடு ஈடுபட்டு, விசையைக் கொடுத்து, நெம்பு கோலின் மறு முனையைத் தொடும்படி செய்கிறது. இதனால், மின் காந்தத்தின் மின் இணைப்பு நிறைவடைய ஒரு பிணைக்கும் கை (Armature) விசையுடன், காங்தத்தை நோக்கித் தள்ளப்படும்.

இவ்வினையால், நெம்புகோல் தள்ளப்பட்டு முன் இருந்த நிலைக்கே வரும். இதே போல், மீண்டும் நிகழத் தண்டு ஊசலாடிக் கொண்டே இருக்கும். ஆகவே கடிகாரம் இயங்கும்.

மற்றொரு வகை மின் கடிகாரத்தில், மாறு மின்னோட்டத்தால் இடைவிடாது இயங்கிக்