இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101
36. டிஎன்ஏ என்றால் என்ன?
- உயிரணுவின் கருவில் காணப்படும் விந்தை வேதிப் பொருளான டி ஆக்சிரிபோஸ் உட்கரு காடியாகும். கால்வழியைக் கட்டுப்படுத்துவது.
37. உட்கரு காடிகளை முதன்முதலில் உற்றுநோக்கியவர் யார்?
- முதன்முதலில் 1869இல் ஆல்தோ பிரடரிச் மிஷர் என்பார் உற்றுநோக்கினர்.
38. இந்த அமிலங்களில் சர்க்கரை உள்ளது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
- 1909இல் போபஸ் ஏரான் தியோடர் எல்வீன் முதன் முதலில் கண்டறிந்தார்.
39. டி.என்.ஏவை விளக்கும் புகழ்பெற்ற மாதிரி எது?
- வாட்சன்-கிரிக் மாதிரி. அது ஓர் இரட்டைச்சுருள்.
40. டிஎன்ஏ எந்த ஆண்டு யாரால் பிரிக்கப்பட்டது?
- 1969இல் மெய்சர் என்பவரால் பிரிக்கப்பட்டது.
41. ஆர்டிஎன்ஏவைப் புனைந்தவர்கள் யார்? எப்பொழுது?
- 1972இல் பால்பர்க், டேல் கெய்சர் ஆகிய இருவரும் புனைந்தனர்.
42. நொதி பாலிமரேஸ் I என்பதை யார் எப்பொழுது அடையாளங் கண்டறிந்தனர்?
- 1959இல் கோர்ன்பர்க், செவிரே ஓக்கோ ஆகிய இருவரும் அடையாளங் கண்டறிந்தனர். இந்நொதி டிஎன்ஏ தொகுப்பை ஊக்குவிப்பது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
43. ஹென்றி எர்லிச் அறிவித்தது யாது?
- மயிரிழைப் புரி ஒன்றில் டிஎன்ஏவின் தனியன் ஒன்றை இனங் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இவர் அறிவித்தார்.
44. டிஎன்ஏ கணிப்பொறி என்றால் என்ன?
- டிஎன்ஏ மூலக்கூறு அடிப்படையில் வேலை செய்யும் மிகப் புதிய கணிப்பொறி. இதில் பிழை ஏற்படாதது தனிச்சிறப்பு. வேதித் தொகுதிகளையும் உயிரியல் தொகுதிகளையும் ஆராயப் பயன்படும்.