பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிவுக்கு உணவு



வெற்றி

நியாயமான காரணங்களை முன்வைத்து நேரான வழியில் சரியாகப் போராடத் தொடங்கிய எவனையும்- அவன் எத்தகைய பலவீனனாய் இருந்தாலும்- வெற்றி விரைந்து தழுவும்.

பொய்யான காரணங்களை முன் வைத்து மறைவான வழியில் தவறாகத் தலையிடும் எவனையும்- அவன் எத்தகைய பலசாலியாய் இருந்தாலும் அது வீழ்த்திவிடும்!


அன்பும் ஆசையும்

நான் தந்தையானேன்; பிறகுதான் பிள்ளைகள்மீது வைக்கும் அன்பு இத்தகைய என்று தெரிந்தது. பாட்டனும் ஆனேன்; இப்பொழுதுதான் பேரப்பிள்ளைகள்மீது வைக்கும் ஆசை இப்படிப்பட்டது என்பது தெரிகிறது. தெரிந்தும், என் அன்பையும் ஆசையையும் அறியாமலும் என்னை ஒரு பொருட்டாகக்கூட கருதாமலும் அப்பிள்ளைகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் என் உள்ளம் பெரிதும் வருந்துகிறது! “என் தந்தை, பாட்டன் இவர்கள் மனம் இப்படித்தான் புண்பட்டிருக்கும்!” என்று எண்ணும்பொழுது என் கண்களிலிருந்து இரத்தம் சொட்டுகிறது. என் செய்வேன்.

செயல்

நாம் எண்ணங்களைக் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுதுகிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம்; குறிக்கோளை நூற்றுக்கணக்கில் குறிக்கிறோம்.துணிச்சலில் பத்துக் கணக்கில் துணிகிறோம்.

ஆனால் நாம் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிறோமோ? கோடை இடி இருப்பதாலேயே குளம் நிரம்பிவிடுமா?

சட்டம்

‘நல்ல சட்டம் செட்ட சட்டம்’ எனச் சட்டத்தில் இருவகை உண்டு. நல்ல அதிகாரி, கெட்ட அதிகாரி என அதிகாரிகளுள் இரு வகையர் உண்டு.