பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிவுக்கு உணவு


கொள்கையில்லாத பேச்சாளி

அறிவில்லாத படிப்பாளி

ஆகிய அறுவரும் நாட்டை அரித்துத் துன்புறுத்தும் நல்ல செல்லுப் பூச்சிகளாம்.


நீ எப்படி?

கடந்துபோன காரியங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவன், எதிர்காலத்திலே அடையவேண்டிய பலன்களையும் இழந்துவிடுகிறான். இழந்து போனவைகள் எண்ணி வருந்தாமல், ஊக்கங்கொண்டு உழைப்பவன், எதிர்காலப் பலன்களையும் பெற்று, இழந்தவைகளையும் திரும்பப் பெற்றுவிடுகிறான். நீ எப்படி?

நல்ல குழந்தைகள், பெரியோர்களின் புத்திமதியைக் கேட்ட உடனே அறிவைப் பெற்றுவிடுகிறார்கள். கெட்ட குழந்தைகள், தாங்களாகத் துன்பப்பட்டு அனுபவித்த பிறகே, நல்லறிவைப் பெறுகிறார்கள். நீ எப்படி?


உயிர்ப்பலி

தங்களைத் தாங்களே காப்பாறறிக் கொள்ளத்தெரியாத மனிதர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள இயலாத விலங்குகளை உயிர்ப்பலி கொடுக்கிறார்கள். இது ஏன்? -


உயர்வு

உண்மை உயர்வை அளிக்கும்.
பொய்ம்மை உயர்வை அழிக்கும்.


தமிழரின் பண்பு
அறத்தின் வழி நிற்றல்

ஆண்மையில் உயர்தல்
இன்பத்தில் திளைத்தல்

ஈதலிற் சிறத்தல்