பக்கம்:அறுந்த தந்தி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 r அறுந்த தந்தி

'இந்த மகிஷ மகாவாகனத்தைக் கண்டவுடன் எனக்கு அருமையான கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. முட்டாளான ராஜகுமாரன் மகிஷ வாகனத்தின் மகிமை யால் பாமரூப செளந்தரியவதியாகிய ஒரு நாரீமணியைக் கல்யாணம் செய்துகொண்டான். அவனுக்கு வந்த பாக்கி யம் அவ்வளவும் அந்த மகிஷ வாகனத்தினுல்தான். உன்னு டைய வாகனத்தைத் தரிசிக்கும்போது எனக்கு அந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. சாமான்யமான மகிஷத் துக்கே அவ்வளவு பெருமை என்ருல் மகா சக்திமானகிய உன் வாகனத்துக்கு எவ்வளவு பெருமை இருக்கவேண்டும்!” கீழே எதையோ பார்த்துக்கொண் டிருந்த மகிஷ வாகனம் பாட்டியின் வார்த்தைகளைக் கேட்டு நிமிர்ந்தது. அதற்கு உள்ளுக்குள்ளே சந்தோஷம் பொங்கியது. யமதர்மராஜன் கையிலிருந்து பாசம் தானே கழுவியது. மீட்டும் ஒரு தடவை தன் வாகனத்தின் பிடரின்மேல் கட்டி ன்ை.

"ஆமாம்; அந்த ராஜகுமாரன் நல்ல நாயகியை அடைந்தான்; மகிஷ வாகனத்திலிருந்து ஆரம்பிக்கிறது கதை. மிகவும் சுவாரஸ்யமான கதை. முட்டாள் என்ருல் சாமான்ய முட்டாளா? சுந்தரி என்ருல் சாமான்யமான அழகியா?”

தென்றிசைத் தலைவன் தன் தொழிலே மறந்தான். பாட்டியின் வார்த்தைகள் அவன் காது வழியே சென்று உள்ளத்தே ஒரு தினவை உண்டாக்கின. கதையைக் கேட்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

ஹேஅம்! அந்த ராஜகுமாரன் யார்? அவன் எப்படி அந்த அழகியை அடைந்தான்?’ என்ற கம்பீரமான

தானியால் வைவஸ்வதன் கேட்டான்.

பாட்டி, பாக்கியம்! உன் திருவாக்கால் கேட்கும் போது கதையைச் சொல்லாமல் இருக்கலாமா? இதோ சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்துவிட்டாள். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/165&oldid=535404" இலிருந்து மீள்விக்கப்பட்டது