பக்கம்:அறுந்த தந்தி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்த தந்தி 1].

அந்தப் படத்தில் இருக்கும் குழந்தை வடிவேலன்தான். இந்தக் குழந்தை மூலம்வந்து, இப்போது ஆரம்பிக்காதே’ என்று உத்தரவிடுகிருன்' என்று கிதான்மாகச் சர்மா சமாதானம் சொல்லிக்கொண் டிருந்தார்.

தம்முடைய அமைதியை இழக்காமல் குழந்தையின் பயத்தைப் போக்க அவனைத் தோளில் சாத்தித் தழுவிக் கொண்டபடியே, சாந்தமான வார்த்தைகளால் தம் கங்கை யின் கோபத்தைப் போக்குவதற்காக, மனசுக்குள்ளே கோபத்தை அடைத்து வெளியிட முடியாமல் இருப்பவர் களுக்கும் சமாதானம் உண்டாகும்படியான வார்த்தை களைச் சர்மா சொல்லிவந்தபோது, அவரைக் கண் கொட் டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் குருமூர்த்தி ஐயர். சில யுருவத்தைப்போல உட்கார்த்திருந்தவர் திடீரென்று எழுங் தார். "ராம பத்திரா இன்றைக்குத்தான் உன்னுட்ைய பெருமையைத் தெரிந்துகொண்டேன், அப்பா! நீ ஒரு மகா புருஷன், சாந்த மூர்த்தி’ என்று சொல்லி அவரைப் போய்த் தழுவிக்கொண்டார். ஒரு தாய் நெடுநாள் பிரிக் திருக்க தன் சேயைத் தழுவிக்கொள்வதுபோல இருந்தது அக்தக் காட்சி.

'இந்தச் சமயத்தில் கானுக இருந்தால் குழந்தையை என்ன செய்திருப்பேனே, தெரியாது. உன் பொறுமையே பொறுமை ! உன்னுடைய மனசிலுள்ள கம்பீரம் அளவிடற் கரியது. உன் கீர்த்தனங்களிலே அமையும் அர்த்த கம்பீ ாத்துக்குக் காரணம் இப்போதுதான் எனக்கு விளங்கு கிறது. படிப்பு வரும், புகழ் வரும், குணம் வராது; துக்கமா லுைம் சந்தோஷமானுலும், விருப்பானுலும் வெறுப்பா ணு,லும், கிச்சலனமாக இருக்கும் கிலே ஜீவன்முக்தனுக்குத் தான் வரும்.’’

அவர் உட்கார்ந்துகொண்டார். சர்மாவும் குழக் தையை மடிமேல் வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

'உன் பெருமை மற்றவர்களுக்குத் தெரிவதைக் காட்டிலும் எனக்குத்தான் கன்முகத் தெரியும். காரணம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/18&oldid=535259" இலிருந்து மீள்விக்கப்பட்டது