பக்கம்:அறுந்த தந்தி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அறுந்த தந்தி

சிந்தனேக்குள் ஆழ்ந்து இரண்டுமணி நேரம் போனதே தெரியாமல் தலையின்மேல் கை வைத்தபடியே உட்கார்க் திருந்த அவனைக் கடிகாரம் பத்து மணி அடித்து எழுப்பி யது. அவசர அவசரமாக அறிையைப் பூட்டிக்கொண்டு சாப்பிடாமலே கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தான்.

臺 瓷 豪

கம்பெனியில் அக்கெளன்டென்டு உத்தியோகம். மனசு வைத்து ஒழுங்காக வேலை பார்க்கிறவன் கணேசன். சென்னையில் பிர்ாட்வேயில் அந்தக் கம்பெனி இருக்கிறது. மயிலாப்பூரில் ஒர் அறையில் ஜாகை வைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிடுகிருன்.

அவன் தகப்பனர் சேலம் ஜங்ஷனில் உதவி ஸ்டே ஷன் மாஸ்டர். அவன் மாமனர் விழுப்புரத்தில் பள்ளிக் கூடத்து வாத்தியார். அவன் மனேவி லசஷ்மி, தலைத் தீபா வளியில் தன் அருமைப் பர்த்தாவைப் பார்த்துப் பேசிக் களிக்கலாம் என்று கனவு கண்டுகொண் டிருக்கிறவள்.

இன்று கணேசனுக்கு வேலை ஒடவே இல்லை. "தலை வவி பொறக்க முடியவில்லை' என்ற சாக்குச் சொல்லி மானேஜரின் இாக்கத்துக்குப் பாத்திரமானன். கவலையும், சாப்பிடாமையால் உண்டான சோர்வும் சேர்ந்து அவனே வாட்டின. ஒருவிதமாக அன்று மாலையில் கம்பெனியை விட்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.

தீபாவளி அணுகிக்கொண் டிருக்தது. ஒவ்வொரு மணியும் அதைச் சமீபத்திலே கொண்டுவந்தது. அவனு டைய சிநேகிதர்களெல்லாம் தீபாவளியைப்பற்றியே பேசி ஞர்கள். தீபாவளி வேஷ்டி, தீபாவளிப் புடைவை, தலைத் தீபாவளி, தீபாவளிப் பட்டாசு, தீபாவளிக் குஷி - இப் படித் தீபாவளிப் பருவத்து வார்த்தைகள் விதவிதமாகக் காதிலே பட்டன. பாவம் ! கணேசன் அவற்றைக் கேட் கும்போதெல்லாம் உள்ளம் குமுறிஞன் ; ஏமாற்றமே உருவமெடுத்ததுபோல் ஆகிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/47&oldid=535288" இலிருந்து மீள்விக்கப்பட்டது