பக்கம்:அலிபாபா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அலிபாபா



அலிபாபா, காஸிமின் மகனை அண்ணன் மகன்தானே என்று வேற்றுமை பாராட்டாமல், அவனுக்காகப் பெரு நிதியைச் செலவழித்து விருந்துகள், நடனக் கச்சேரிகள் முதலியவற்றை முறைப்படி நடத்தி வைத்தான். விருந்தினர் பலருக்கும் மார்கியானாவின் வீரமும் தீரமும் உறுதியும் மதிநுட்பமும் தெரிந்திராத போதிலும், உத்தமமான அந்தப் பெண்ணுக்கு அலிபாபா சுதந்தரம் அளித்துத் தன் குடும்பத்திலேயே அவள் தங்கியிருக்கும்படியும் செய்ததை அவர்கள் மிகவும் பாராட்டிப் புகழ்ந்தனர்.

அதுமுதல் அலிபாபாவுக்கு மேலும் மேலும் தொழிலில் வெற்றி கிடைத்து வந்தது. அவன் தொட்டவையெல்லாம் பொன்னாக விளைந்தன. அதிருஷ்டம் புன்னகையோடு அவனுடன் ஒட்டிக் கொண்டேயிருந்தது. அவன் மேற் கொண்டு வனத்திற்குச் செல்லவோ, திருடர்களின் பொக்கிவடிக் குகையைப் பார்க்கவோ மனமில்லாமல், நெடுங்காலம் அஞ்சிக் கொண்டிருந்தான். ஏனெனில், நாற்பது திருடர்களில் இன்னும் இருவருடைய கதி என்ன ஆயிற்று என்பதை அவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த இருவரும் தன்னைப் பழிவாங்கக்கூடும் என்று அவன் கருதியிருந்தான். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, அவன் ஒருமுறையாவது போய்க் குகையைப் பார்த்து வரவேண்டுமென்று விரும்பினான். அவன் தன் குதிரையில் ஏறிக் கொண்டு, குகைக்கு சென்று, முன் போலவே “ஒ ஸிம் ஸிம், திற!” என்று சொன்னான். உடனே வாயிற்பாறை நகர்ந்துவிட்டது. அவன் உள்ளே சென்று பார்க்கையில் முன்பு காஸிமின் உடலை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/72&oldid=512534" இலிருந்து மீள்விக்கப்பட்டது