பக்கம்:அழகர் கோயில்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20% அழகர்கோயில் போல் இறுக்காம கட்டியிருப்பர், கரும்பின் தோகையிவை உட்புறமாக வைத்துக் கட்டியிருப்பதால், கரும்பிலிருந்து தென்வை! யும், பனையும், வாழையும் குலை தள்ளியதுபோல இவை தோன்றும். கிழக்கிந்தியப் பகுதிகளில் திருவிழா அலங்காரங்களில் 1917இலேயே 'தாள்' (pcper) இடம்பெற்றுவிட்டதைப் பி.கே. சர்க்காரின் குறிப் பால் அறிகிறோம்.13 புதூர், தல்லாகுளம் பகுதிகள் ஒரு காலத்தில் மதுரை நகருக்குப் புறத்தே இருந்தவை. இன்று இப்பகுதீகள் மதுரை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டவை. ஒரு மாநகராட்சிப் பகுதியில் அமைந்திருந்தும் கூட இப்பகுதியிவமைந்த திருக்கண:களில் அலங்காரத்தில் இன்றளவும் தாள் பயன்படுத்தப்படாமை நாட்டுப் புறக் கலைமரபின் செல்வாக்கினைக் காட்டுகிறது எனலாம். விவசாயீகள் இறைவனுக்குக் காணிக்கை செலுத்தக் கொண்டு வரும் புதிய விவைபொருட்களைக் கூடையில் கொண்டுவருவதில்லை புதிதாக வினைந்த வைக்கோலையே புரிகளாகத் திரித்து, கூடை போலப் பின்னிப் புதிய தானியத்தை அதில் நிரப்பி மேற்பகுதியினை யும் புரிகளாலேயே பின்னி மூடிவிடுகின்றனர். வைக்கோல் புரியாலேயே கத்தரிக்காய்க் காம்பு போன்ற கைப்பிடியினையும் செய்து தூக்கிவருக்கின்றனர். சுமார் 15 கிலோ வரை எடையுள்ள தானியங்களை இவ்லாறு கொண்டு வருகின்றனர். நாட்டுப்புறக் கலைத்திறமைக்கு (folk-craft) 'தளுக்கு' எனப்படும் இத்தானியம் கூடைகள் எடுத்துக்காட்டாகும் (படம்: 28). இறைவனுடைய 'தளிகைக்கு' (உணவுக்கு) எனக் கருதி கொண்டுவரப்படுவதால் இவை (தளிகைக்கு என்ற சொல் மருவி) 'தளுக்கு' என வழங்கப் படுவதாகத் தோன்றுகிறது. தளிகை என்ற சொல்லைத் 'தவிகை' என்றே குறிப்பிடுகின்றனர். எனவே 'தளிகைக்கு' எனும் சோல் 'தளுக்கு' என ஆயிருக்கலாம், 9 8. நாட்டுப்புற மக்களின் காணிக்கை : நாட்டுப்புற மக்கள் கோயிலுக்குச் செலுத்தும் காணிக்கை யின் பெரும்பகுதி தானியங்களாகவும் கால்நடைகளாகவுமே அை கின்றது. தானியங்களை அழகர்கோயிலிலும், மதுரை நல்லாகுநாம் பெருள் கோயிலிலும் காணிக்கை செலுத்துகின்றனர். இரண் கோயில்களும் பரம்பரையாக ஒரே நிருவாகத்தின்கீழ் (கோய்ற பணியாளர்கள் உட்பட) அமைத்திருப்பதாலும், மதுரை வரும் அழகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/209&oldid=1468082" இலிருந்து மீள்விக்கப்பட்டது