பக்கம்:அழகர் கோயில்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

222 அழகர்கோயில் குறிப்பு காணக்கிடக்கிறது. குறும்பு செய்த கண்ணனை அசோதை ஒரு சிறுகயிற்றாலே உரலோடு சேர்த்துக் கட்டினாள். அவள் கட்டிய போது முரடனான கண்ணன் அதற்கு இணங்கியவன்போல, எதிர்ப் பேதும் காட்டாது இருந்தான். "இவன் 'சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடுங்கோள்' என்றிருந்தான் 1' என்பது உரைப்பகு தியாம். இதன் தொடர்பாக வைணவர்களிடம் வழங்கிவரும் கதை யினைப் புருஷோத்தம நாயுடு விளக்குகிறார்: அழகர் திருமலையிலே சாமாந்யர், சோழியர் என்று இரு வகைப் பிரிவினர் இருந்தனர்; அவ்விருவகைப் பிரிவினர்களுள் எப்போதும் விரோத உணர்ச்சி உண்டு; அதனால் சோழியர் எல்லாரும் சாமானியரைக் கண்டால் அடிந்துத் துன்புறுத்துவது என்ற எண்ணம் கொண்டிருந்தனர். ஒருநாள் இரவிலே சோழியர்களிலே ஒருவன் தனியே வர, அவனைச் சாமானியன் என நினைத்துச் சோழியர் அனைவரும் ஒருங்கு திரண்டுவந்து அடிக்க, அடிபடுகிற அவன், 'நான் சோழியன்' என்னை ஏன் அடிக்கிறீர்கள்? என்ன, 'ஐயோ. உன்னைச் சாமானியன் என்று நினைத்து அடித்துவிட்டோமே. என்ன, 'அப்படியானால் இன்னம் அடியுங்கோள், குத்துங் கோள்' என்று சாமானியன் மேலே உள்ள பகை உணர்ச்சியால் தான் அடிபடுகிற நோவும் தோற்றாமல் சொன்னான் என்பது ஐதிஹ்யம் '20. 10.12. சாமானியர் பெற்ற உரிமை: முற்காலத்தில்‘சாமானியர்' நாச்சியார் பரிகரத்தாராக மட்டுமே இருந்துள்ளனர். பெருமாளுக்கு (இறைவனுக்கு) நாச்சியார் (இறைவி) செய்யவேண்டிய உணவாக்கும் வேலையினை இவர்கள் செய்வதால், இவர்களுக்கு நாச்சியார் பரிகரத்தார் எனப் பெயர். பின்னர் இப்பிரி வினருக்குச் சன்னிதி பரிசாரகப் பணியில் பங்கு கிடைத்ததற்கு இக்கோயில் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி காரணமாயிருந் திருக்கிறது. திருமலைநாயக்கர் காலத்திற்கு முன்னர், சித்திரைத் திரு விழாவிற்கு அழகர் ஊர்வலம் சோழவந்தானை அடுத்த தேனூர் கிராமத்திற்கே சென்றது. ஒருமுறை, சித்திரைத் திருவிழாவில் தேனூசில ஆற்றங்கரையில் இறைவன் எழுத்தருளியிருந்த பந்தல் தீப்பற்றி எரிந்தது. தீப்பற்றியதும் பணியாளர் உள்ளிட்ட திருவிழாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/229&oldid=1468103" இலிருந்து மீள்விக்கப்பட்டது