பக்கம்:அழகர் கோயில்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11. பதினெட்டாம்படிக் கருப்பசாமி 11.0. தமிழ்நாட்டுப் பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளையுடையது. அவற்றுள் ஒன்று இக் கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்} எப்பொழுதும் அடைக் கப்பட்டிருப்பதாகும். சிறுதெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படிக் கருப்பசாமி என்ற தெய்வம் இக்கோபுர வாசலில் உறைகின்றது. எனவே இக்கோபுர வாசல் 'பதினெட்டாம்படி வாசல்' என்றும் அழைக்கப்படுகின்றது. 11.1. அடைத்த கதவு :

  • அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கதவுகளுக்குச் சந்தனம் குங்குமம். கற்பூரம் முதலியவை பூசி, மாலை, புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்துப் பூஜை செய்வார்கள்...இப்பதினெட் டாம்படிக் கதவு பிரம்மோத்ஸவ காலத்தில் (ஆடி மாதம்} சக்கரத் தாழ்வார் வருவதற்காக மட்டும் வருஷம் ஒருமுறை திறக்கப்படும். சில சமயங்களில் ஏதாவது பிரமாணம் செய்ய விரும்புபவர்களுக்கு அது திறக்கப்படும். ஆகையால் அழகச்கோயில் பிரதான வாசலாகிய இப்பதினெட்டாம்படி வாசல் சாதாரணமாக மூடப்பட்டே இருக்கும். இதற்கு வடக்கே உள்ள வண்டிவாசல் என்பதுதான் கோவிலுக்குள் போகும் வழி என்று ஸ்ரீகள்ளழகர் கோயில் வரலாறு கூறுகின்றது.3

11.2. தெய்வமும் உருவமும் : சந்தனம் சாத்தப்பெறும் கதவில் உறைகின்ற தெய்வமே பதினெட்டாம்படிக் கருப்சாமியாகும். "இவருக்கு இங்கே உருவம் இல்லை இங்குப் பதினெட்டாம்படிக் கோபுரக் கதவுகளையே இத் தெய்வமாக எண்ணிப் பூஜைகள் நடக்கும். மற்ற இடங்களில் இவர் கையில் ஒரு கொக்கியும் (அரிவாளும்), கதாயுதமும், ஈட்டி முதலியவையும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார். இவரது தரிசனம் பயங்கரமாகவும், யுத்தபாவனையிலும் இருக்கும் என்றும் கோயில் வரலாறு கூன்கின்றது.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/234&oldid=1468109" இலிருந்து மீள்விக்கப்பட்டது