பக்கம்:அழகர் கோயில்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 229 இத்தியான கலோகத்தில் கருப்பசாமியின் சிலைகளில் காணப் படும் பெருத்த தொந்தியும், முறுக்கிய மீசையும் சொல்லப்படவில்லை. இச்சுலோகத்தில் சொல்லப்படும் 'அழகிய கோசைப்பற்கள்' சிலைகளில் காணப்படவில்லை. எனவே இத்தெய்வத்தை வழிபடும் அடியவர் ஒருவரால் இத்தியான சுலோகம் இயற்றப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலும் சிறுதெய்வங்களை வழிபடாத வட மொழி அறிந்த பிராமணர் யாரேனும் இச்சுலோகத்தைச் செய் திருக்கலாம். சுலோகம் கூறும் 'கிருஷ்ணபுத்திரன்' என்ற பெயரை இக்கோயிலின் பிராமணப் பணியாளர் மட்டுமே அறிதிருக்கின்றனர் என்பதாலும் இவ்வாறு எண்ணத்தோன்றுகிறது. நாட்டுப்புற மக்கள் பாடும் ராக்காயி வர்ணிப்பு, கருப்பசாமியை அழகருக்குத் (திருமாலுக்குத்) தமபியாகவே குறிப்பிடுகின்றது. பதினெட்டாப்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, 'கண்ணா, உள் தமையன் கருப்பன்' எனக் குறிப்பிடுகின்றது. 11.3. கருப்பசாமி சன்னிதி அமைப்பு : கோயில் மதிற்சுவரோடு அமைந்த ராஜகோபுரத்துக்குக் கீழுள்ள இரட்டைக்கதவு கோயிலுக்கு உட்புறமாகத் தாழிட்டு சாத்தப்பட்டுள்ளது. வெளிப்புறமாகக் கருப்பசாமியாக வழிபடப் பெறும் இரட்டைக்கதவு வரை நாற்பதடி நீளம் இருபுறமும் உயர மான சுவர்களைக் கொண்ட பகுதி மேற்கூரையில்லாது அமைந் திருக்கிறது. இப்பகுதியில் கோயிலின் வெளிப்புறத்தை நோக்கிக் கிழக்குமுகமாக இறங்கும் பதினெட்டுப் படிகள் அமைந்துள்ளன. மேற்படியின் ஓரத்தில், மூன்றடி உயரப் பிடியின்மேல் சுமார் எட்டு அடி உயரமுள்ள அரிவாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பதினெட் டுப்படிகளும் இறங்கும். இடத்தில் ஏறத்தாழப் பறினைந்து அடி நீளச் சமதளம் உள்ளது. சமதனப் பகுநியின் முடிவில் சந்தனம் பூசப்பெற்ற இரட்டைக்கதவு உள்ளது (படம்: 33). இக்கதவினையே மக்கள் கருப்பசாமியாகக் கருதிச் சந்தனம் பூசி வழிபடுகின்றனர். இக்கதவும் எப்பொழுதும் அடைக்கப்பெற்றிருப்பதால், கதவின் வெளிப்பு றத்திலேயே மக்கள் வழிபடுகின்றனர். கிழக்கு மேற்காக அமைந்த மலையின் தென்திசைச்சரிவீல் கோயில் அமைந்துள்ளது. ராஜகோபுர மதிலுக்குட்பட்ட பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/236&oldid=1468111" இலிருந்து மீள்விக்கப்பட்டது