பக்கம்:அழகர் கோயில்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

244 11. 16.2. சைவ இணை: அழகர்கோயில்

  • ‘நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரிதும் வழிபடப்பெறும் சுடலைமாடன் கருப்பசாமிக்கு சைவ இணை ஆகலாம்" என்பர் டாக்டர் முத்துச்சணமுகனார். 59 இக்கருத்தும் ஆழ்ந்து சிந்தித்தற் குரிய ஒன்றாகும். "தூண்டப்பெற்ற விளக்கின் சுடரிலிருந்து வீழும் எண்ணெய்த் துணிகளைத் தன் முந்தானையில் ஏந்துகிறாள் பார்வதி. சிவனின் திருவருள் விருப்பத்திற்கிணங்க அவை ஒன்று நிரண்டு சுடலைமாடாைக உருவெடுக்கின்றன. தொட்டில்பிள்ளை யாக இருக்கையிலேயே மாடன் சுடுகாட்டுப்பிணம் தின்பதில் விருப்பம் கொள்கிறான் என்று வில்லுப்பாடல்கள் கூறும் சுடலை மாடனின் பிறப்பிளையும் இயல்பிளையும் தி.சு. கோமதிநாயகம் விளக்குகிறார்.60

திருநீற்றினைக் 'காடுடைய சுடலைப்பொடி 'என்பர் திருஞான சம்பந்தர். 'உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை உறைவது ஈமம்' என்றும், 62 ‘மாண்டார்தம் என்பும் மலர்க்கொன்றை மாலை யும் பூண்டார்' என்றும் திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாடு கிறார். சிவபெருமானின் இச்சுடுகாட்டுக் கோலத்தை மட்டும் வழி படும்‘கபாலிகா'எனும் பிரிவினரும் தமிழ்,நாட்டில் இருந்தனர். *வித்தகக்கோல வெண்தலைமாலை விரதிகள், எனத் தம் காலத்தி லிருந்த கபாலிகத் நுறவியரைத் திருநாவுக்கரசர் பாடுகிறார். பிற்காலத்தில் காபாலிக வழிபாடு தமிழ்நாட்டில் மறைந்துவிட் டது. சிவன் நெருப்பேத்திச் சுடுகாட்டில் நடனமிடுபவன்; இறந் தவர் எலும்பை மாலையாக அணிந்தவன்; அதையே உண்பவன் நெருப்பிலிருந்து பிறந்த சுடலைமாடனும் சுடுகாட்டையே இருப்பிட மாகவும் பெயராகவும் உடையவன்; பிணத்தின்பவன், காத்தற் கடவுளாகிய திருமாலிடமிருந்து காவல்தொழில் செய்யும் கருப்பசாமி தோன்றியதுபோல, சுடுகாட்டில் உறைந்து வெண்தலை உண்ணும் சிவனிடமிருந்து நெருப்பிலே பிறந்து, பிணத் தின்னும் சுடலைமாடன் தோன்றினான் போலும். டாக்டர் முத்துச்சண்முகனாரின் கருத்து நம்மை மற்றொரு முடிவுக்கும்வரத் தூண்டுகிறது. பெருந்தெய்வங்களின் பண்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/251&oldid=1468128" இலிருந்து மீள்விக்கப்பட்டது