பக்கம்:அழகர் கோயில்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

268 அழகர்கோயில் இந்த விழாவில் உழவர்களுக்குப் பங்கில்லை. இந்திரனுடைய வச்சிரப்படையை எடுத்துவந்து நீராட்டுவோர் 'அரசகுமரரும் பரத குமரரும் என்கிறார் இனங்கோ. 'பரதகுமரர்' வணிக குலத்தவர் என உரையாசிரியர் கூறுகிறார். சமூகத்தின் மேல்தட்டில் வாழ்ந்த மக்களின் விழாவன்றி, உழுதொழில் செய்வோரின் விழாவாக இது இல்லை. இருப்பினும் தீம்புனல்உலகத் தலைவனான இந்திரனிடம் மழை வேண்ட மட்டும் எடுத்த விழாவன்று அது என்பது தெளிவு. ஏனெனில் குன்றக்குறவர், பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மழை வளம் தருவாள் என்று வேண்டி வழிபடும் செய்தியைச் சிலப்பதிகாரத் திலேயே, "ஒருமுலை இழந்த நங்கைக்குப் பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே' என்ற அடிகளில் காண்கிறோம். சிலம்பின் காலத்து மழைத்தெய்வ வழிபாடு வீரவழிபாட்டில் கலந்துவிடுகின்றது. மணிமேகலை, "மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டிர் என இக்கருத்தை மேலும் விரிவாக்குகிறது. ஆயர்பாடியைச் சேர்த்தவர்கள் இந்திரனுக்குப் படையலி முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கிறான். நந்த கோபனை நோக்கி, "தந்தையே! நாம் உழவர்களுமல்ல; வணிகரு கல்ல... இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளும் மலையுமே நமது தெய்வங்கள் 318 என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். ' இந்திர வழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழி யைக் கையாண்டான் என்று விலகின்ஸ் (Wilkins) கருதுகிறார்." இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த போராட்டத்தை ஆரியர்-ஆரியர் அல்லாதார் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காண்கிறார் எஸ். ராதாகிருஷ்ணன் 26 இந்திரன் ஆயர்களிடம் சினத்தைக் காட்டிப் பெருமழை பொழிய, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/275&oldid=1468152" இலிருந்து மீள்விக்கப்பட்டது