பக்கம்:அழியா அழகு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 109s

(சுரிகையன் - உடைவாளே உடையவன். வெட்டிய - கடுமையாகப் பேசும், துடி - உடுக்கை, குறிக்கும் - ஊதும். கிளர்ந்த - உயர்ந்து வீங்கிய.)

வருகிற கூட்டம் பெரிதாகத் தோன்றுகிறது. முன்னே உள்ள புழுதியைப் பார்த்தாலே அப்படி ஊகிக்கும் படி இருக்கிறது. அதைப் பார்க்கிருன். "எவ்வளவு பெரிய படையாக இருந்தால் என்ன?" என்று அலட்சிய மாகப் பேசுகிருன். "இத்தனே படையும் எலிக் கூட்டம்; கான் பாம்பு’ என்கிருன்.

அருகில் அவனுடைய தோழர்கள் சிற்கிருர்கள். அவர்களைப் பார்த்து, 'யார் வந்தாலும் சரி, ஓடத்தை விடாதீர்கள். இங்கே வருகிறவர்களேப் பிடியுங்கள்' என்று சொல்லும் போது அவன் சினம் கனன்று பொங்குகிறது;. தென் கரையில் கின்றபடியே அவன் பேசலானன்.

அவன் பேச்சைப் பத்துப் பாட்டுக்களால் கம்பன் விரித்து அமைக்கிருன், அவனுடைய வெட்டிய பேச்சுக்கு, எற்றபடி சர்தத்தை மாற்றுகிருன்.

2

'அஞ்சன வண்ணன்என் ஆருயிர்

ாாயகன் ஆளாமே

வஞ்சனை யால்அர செய்திய

மன்னரும் வந்தாரே!

செஞ்சரம் என்பன தீஉமிழ்

கின்றன; செல்லாவோ?

உஞ்சிவர் போய்விடின் காய்குகன் என்றென ஒதாரோ?"

1. குகப் படலம், 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/117&oldid=523319" இலிருந்து மீள்விக்கப்பட்டது