பக்கம்:அழியா அழகு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 119

மறத்தவர் மாய, அறத்தவர் ஆளவேண்டும் என்ற முறையைக் குகனுடைய துணைவர்களில் சிலர் தெரிந்து கொண்டிருப்பார்கள். திேயை விரும்பும் நெஞ்சினர் சிலரே இருக்க முடியும். மற்றவரில் பலர் புகழை விரும்பும் இயல் பினராக இருப்பார்கள். நம்முடைய சாதிக்கு இந்தப் புகழ் கிடைப்பதாக இருந்தால், ஒரு கை பார்க்கவேண் டியதுதான் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகும்.

இனி, மற்றவர்களில் குகனிடம் அன்பும் கம்பிக்கையும் உடையவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுக்குக் குகன் இந்த நிகழ்ச்சியைத் தன்னேடு தொடர்புபடுத்திச் சொல் கிருன்.

"இராமன் என் நாயகன். அவன் தன் நாட்டை இவர்களுக்குக் கொடுத்துச் சென்ருன். அப்படி இருந்தும் அவன்மேல் இவர்கள் படையெடுப்பது எவ்வளவு கொடுமை' என்று அடுத்தே கூறுகிருன்.

கியாயத்தை மதிப்பாரும், புகழாசை பூண்பாரும், தன்பால் பேரன்பு உடையாருமாக உள்ளவர்களுக்கு இனி வரும் போரிலே ஊக்கம் உண்டாகும் வகையில் பேசிய குகன் இறுதியில் ஒன்று சொல்கிருன் அவன். தன்னுடன் பழகும் மக்கள் இயல்பை நன்கு உணர்ந்திருந்தவன் என் பதை அது தெளிவாக்குகிறது.

குகனுடைய துணைவர்குழுவில் உடம்பு வலிமை யுள்ளவர்களே யாவரும். ஆனல் அவர்களுடைய மன இயல்பு ஒரே கிலேயில் இராது. மிகவும் தாழ்ந்த கிலேயில் பண்படாத உள்ளம் படைத்த முரடர்களும் இருத்தல் கூடும். அவர் களுக்கும் ஊக்கம் உண்டாக்க வேண்டும் என்பது குகனு டைய எண்ணம்.

மிக்க இழிநிலையிலுள்ள மக்கள் பிறருடைய நலத்தைச் சிறிதும் கருதமாட்டார்கள்; தம் கலமே கண்ணுக இருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/127&oldid=523329" இலிருந்து மீள்விக்கப்பட்டது