பக்கம்:அழியா அழகு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 121

(காயகனுக்கு - இராமனுக்கு. கொடுக்கிலராகி கொடுக்க மனம் இல்லாதவராகி. எடுத்தது படை எடுத்து வந்ததை.)

"நாம் ஆளும் காடு' என்பதில்தான் இந்த வாதத்தின் உயிர் நிற்கிறது. எத்தனை கீழ்மகனக இருந்தாலும், "அப்படியா? இந்தப் பயல் நம்முடைய காலயா மிதிக்க வந்து விட்டான்?" என்று சிறி எழுவான் அல்லவா?

அறகினேவு, புகழாசை, தலைவன்பால் அன்பு, தன்னலத் .துக்கு ஊறு வந்தால் சிறும் இயல்பு என்ற இந்த நான்கு இயல்புடையவர்களேயும் ஊக்கும் பொருட்டுக் குகன் கூறுவ தாக அமைந்த இந்தப்பாட்டு மிகமிகச் சிறந்த பாடல்.

'ஆடு கொடிப்படை சாடி 'அறத்தவ

ரே ஆள வேடு கொடுத்தது பார்'எனும் இப்புகழ்

மேவிரோ? நாடு கொடுத்தனன் நாயக னுக்கிவர்

காம் ஆளும் காடு கொடுக்கில ராகி எடுத்தது

காணிரோ?' !

அடுத்தது கோபக்கூற்றின் கடைசிப் பகுதி.

"பெரிய முனிவர்களுக்கு நண்பனகி வனத்தினிடை வாழும் மன்னனுகிய இராமன் சிற்றும் கொள்வான் என் பதைச் சிறிதும் மனத்தில் எண்ணுமல், இவர்கள் போர்க் களத்தில் என்முன் எதிர்ப்படுவார்களானல், ஏழு கடலளவு படையாக இருந்தாலும் பசுமர்ட்டின் முன் சிக்கிய இளம் பயிரைப் போல இப்பொழுதே காசமாகிவிடாதா?’ என்று குமுறுகிருன்.

1. குகப்படலம், 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/129&oldid=523331" இலிருந்து மீள்விக்கப்பட்டது