பக்கம்:அழியா அழகு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 145

அங்கே கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூவரும் இருந்தார்கள். அந்த மூவரிலும் கோசலையை முதலில் தொழுதான் குகன். அவனுக்கு எப்படி அவள்தான் முதலில் தொழுவதற் குரியவள் என்று தெரிந்தது? என்ற ஐயத்தை நீக்கவே கம்பன், சுற்றத்தார் தேவரொடும் தொழரின்ற கோசலை என்ருன், தசரதனின் முதல்தேவி யாதலின் அவனைச் சேர்ந்தவர்கள் அவளைத் தொழுதார்கள். இராமனைப் பெற்றதல்ை தேவர்கள் தொழும் சிறப்பை உடையவளாளுள் அவள். பத்துப் பேர் ஒன்ருக உட்கார்க் திருக்கும் ஓரிடத்தில் எல்லோரும் ஒருவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால் அவரிடம் ஏதோ சிறப்பு இருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம். இங்கே அருகில் உள்ளவர்கள் தொழும்படியாக கின்ற நிலையினல் கோசலை தனிச்சிறப்புடையவள் என்பதைக் குகன் உய்த்துணர்ந்து கொண்டான். அதனல் முதலில் அவளுக்கு ஒரு கும்பிடு போட்டுப் பரதனிடம் அவளேப்பற்றிக் கேட்டான். குகன் உய்த்துணரும் அறிவுடையவன் என்பதை இச்செயல் காட்டுகிறது."

அடுத்தபடியாகச் சுமித்திரையை வணங்கி, "இந்தப் பெருமாட்டி யார்?' என்று குகன் கேட்டான். தசரதன் தேவியரில் முன்னவள், பின்னவள் என்று முறை வகுக்கும். போது கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற வரிசையி லேயே மூவரும் நிற்பார்கள். அந்த வகையில் தலைமை யானவளுக்கு முதற்கும்பிடு போட்ட குகன் அடுத்தபடி கைகேயியைப்பற்றி அல்லவா கேட்டிருக்க வேண்டும்? சுமித்திரையைப் பற்றிப் பரதனை வினவுவது எட்படி முறையாகும்:

இந்த ஐயத்தையும் கம்பன் நீக்குகிருன். கோசலையை

முதலில் தொழுவதற்குரிய காரணத்தை. அவள். பலரும்

வ. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/153&oldid=523355" இலிருந்து மீள்விக்கப்பட்டது