பக்கம்:அழியா அழகு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அழியா அழகு

என்ற பாடமே காணப்படுகிறது. அதற்கு இருவகையில் பொருள் கொண்டும் சிறப்புற அமையாமையில்ைதான் வேறு பாடங்களைச் சில புலவர்கள் ஏற்றுக்கொண்டு பதிப் பித்திருக்கிருர்கள்.

2

பெரும்பான்மையாக வழங்கும் பாடத்தில் தெளிவு: இல்லாமல் இருக்கிறது. காந்தம் என்ற சொல் பொருத்த மின்றி விழுந்திருப்பது போலத் தோன்றுகிறது. கம்பன் வேறு எங்கேனும் காந்தத்தைச் சொல்லியிருக்கிருன, தேடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. 'அநுமன் இந்தக் காந்தத்தைக் கண்டதுபோல நாமும் வேறு காந்தத். தைக் காண முடிந்தால் எவ்வளவு என்ருக இருக்கும்!' என்று. வினைத்துப் பார்த்தேன்.

ஒரு நாள் நான் தேடிய காங்கம் அகப்பட்டு விட்டது. மயக்கம் தந்த காந்தம் சுந்தரகாண்டத்தில் காட்சிப் படலத் தில் இருக்கிறது. மயக்கத்தைத் தெளிவித்த காந்தம் யுத்தகாண்டத்தில் மீட்சிப் படலத்தில் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.

இராமன் இராவணனைச சங்காரம் Licঠেre০৫টি யாயிற்று, சீதையைத் தீயில் முழுகச் சொல்கிருன். யாவரும் கவலேயோடிருக்கும் போது சீதை தீயில் குளிக் கிருள். அவள் கற்புத் தீ எரியையும் சுடுகிறது. தீக்கடவுள் அப்பெருமாட்டியை ஏந்தி வந்து இராமனுக்கு முன் இட்டு: அவளது பெருமையைப் பாராட்டி உரைக்கிருன். பிறகு, கான்முகன் இராமனைத் துதித்துச் சீதையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிருன்,

பின்பு ஏறமர் கடவுளாகிய சிவபிரானும் சீதையைத் துறவாமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/216&oldid=523418" இலிருந்து மீள்விக்கப்பட்டது