பக்கம்:அழியா அழகு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அழியா அழகு

வனத்தை அழித்து, அரக்கர் பலரைப் பொருது அழித்து. இலங்கையை எரியூட்டி இராமனிடம் வருகிருன்.

இராமனிடம் தான் சீதையைக் கண்ட செய்தியைச் சொல்கிருன், அப்பெருமானுக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந் தவன் ஆதலின் எடுத்தவுடன், 'கண்டேன் சீதையை' என் கிருன் பின்பு விரிவாகச் சொல்கிருன்.

அப்போது, "நான் அங்கே சீதையைக் காணவில்லை” என்று சொல்லிக் காரணமும் சொல்கிருன். "நீ சொல் லோவியத்தால் குறித்த பெண் அங்கே இல்லை' என்பான் போல,

"விற்பெருந் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பில் கற்பெருக் தவத்த ளாய

கங்கையைக் கண்டேன் அல்லேன்' '

என்கிருன். நல்ல வேக் கண்டனென் கற்பினுக்கு அணியை" என்று முதலில் சொல்லியபிறகே இப்படிச் சொல்வதனல் தீங்கு ஒன்றும் நேரவில்லே. இல்லையாளுல் இராமன் உணர்விழந்திருத்தல் கூடும். சொல்லின் செல்வ: கிைய அநுமன் ஏதோ ஒரு குறிப்புடன்தான் இப்படிச் சொல் கிருன் என்று இராமன் தெரிந்து கொண்டான். "பின் என்ன கண்டாய்' என்று அவன் கேளாவிட்டாலும் அவன் கண்கள் கேட்டிருக்க வேண்டும். --

அநுமன் தான் காணுததைச் சொன்னவன் பின்பு, கண்டதைச் சொல்கிருன்.

1. சுந்தர. திருவடி தொழுத. 29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/236&oldid=523438" இலிருந்து மீள்விக்கப்பட்டது