பக்கம்:அழியா அழகு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"18 அழியா அழகு

வெதும்பிக் கொண்டிருக்கிருள். அவளுடைய கிலேயைக் கண்ட தோழிமார்கள் அவளைப் படுக்கையிலிருந்து எழுப்பி ஒரு பளிங்கு மாடத்துக்கு அருகில் உள்ள தாமரை பொய்கைக் கரைக்கு அழைத்துச் செல்கிருர்கள். அங்கே சக்திரகாந்தக் கல்லிலிருந்து ஊறிய குளிாந்த நீரைத் தெளித்து இரு படுக்கையில் அவளே இருக்கச் செய்கிருர்கள். .

அங்கும் அவளுடைய மனம் அமைதி பெறவில்லை இராமபிரானுடைய திருவுருவத்தையும் அவன் மேனி அழகையும் கினைந்து கினேந்து காதல் நோய் மிக்குச் சாம்புகிருள். சீதையின் கூற்ருகக் கம்பன் பல பாடல்களே அங்கே சொல்கிருன்.

அவள் அவ்வாறு இருக்க, அரசவையில் இராமன் வில்லை ஒடித்த மகிழ்ச்சிச் செய்தி அகிலமோதுகிறது அங்கிருந்து அதைப் பல தோழிமார் பார்த்துக் கொண்டிருக் கிருர்கள். வில் ஒடிந்து விழுந்தவுடன் யாவரும் உவகை மயமாக சிற்கின்றனர் அப்போது ஒரு தோழி, நீலமாலை என்னும் பெயருடையவள், இந்தக் களிப்புக்கு உரிய செய்தியைச் சீதைக்குத் தெரிவிக்க வேண்டுமென்று வருகிருள்.

சீதையுடன் நம்மை இருக்கச் செய்து அவள் விலையை யும் பேச்சையும் காட்டிய கம்பன் இப்போது ம்ை கவனத்தை வேருெரு பக்கத்துக்குத் திருப்புகிருன். காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சீதையோடு ஒன்றிப் போன நமக்கு, இராமனே அரசவையில் கிறுத்திவிட்டு வந்தது இப்போது கினேவுக்கு வருகிறது. லேமாலேயினிடம் ாம் கவனத்தைத் திருப்புகிருன் கவிஞன், அவள் சீதை யிடம் வந்து இராமன் வில்லை ஒடித்த செய்தியைச் சொல்லப் போகிருள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/26&oldid=523228" இலிருந்து மீள்விக்கப்பட்டது