பக்கம்:அழியா அழகு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அழியா அழகு

.ஒவியத்தையே அவன் சொல்லிலே வடித்துத் தருகிருன். அவன் தான் பெற்ற உணர்ச்சி இன்பத்தையே நாமும் பெறும் படி செய்கிருன். ஆனால் அவன் அடைந்த இன்பம் அத்தனையும் அப்படியே நமக்கு வந்து விட்டன என்று சொல்ல இயலாது. தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சி விளேயாடுகிருர்கள். அவர்கள் அடையும் இன்பத்துக்கு ஈடே இல்லை. ஆயினும் தாய் பெறும் இன்பம் ஒரு மாற்று உயர்வாகவே இருக்கும். -

'செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயக'னை கம்பன் இராம காதையைப் படைப்ப தற்கு முன் தன் உள்ளத் திரையில் இராமாயணத்தைக் காண்கிருன்; கேட்கிருன்; அநுபவிக்கிருன். என்ருே கடந்த இராமகதை, எப்படியோ கிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவன் உள்ளத்தே மீட்டும் உருவெடுக்கின்றன. அதே இராமன், அதே கதை என்று சொல்வதற்கில்லே, கம்பன் தன் அன்புக்கும் அறிவுக்கும் புலமைக்கும் ஏற்ற வகையில் இராமகாதையின் வித்தை உள்ளத்திலே பதியவைக்கிருன். அது பூரித்து வளர்கிறது; கதையின் ஒவ்வொரு சிகழ்ச்சி யையும் அவன் தன் அகக்கண்ணுல் காணுகிருன்; அதில் ஊறுகிருன்: இன்புறுகிருன் பின்பே கவியுருவில் தருகிருன். அப்படித் தரும்போது அவன் தான் பெற்ற உணர்ச்சியை அந்தக் கவிதை அப்படியே காட்டுகிறதா என்று பார்க்கிருன். சொல்லிறந்த ஒன்றை அவன் சொல்லி விட்டான் என்று நாம் கொண்டாடுகிருேம். அவனே, "கான் சொல்ல வேண்டியது முழுவதையும் சொல்ல முடிய வில்லையே!" என்று அங்கலாய்க்கிருன். - . - கைகேயின் சுடுசொல்லேக் கேட்ட இராமன் எவ்வாறு இருந்தான் என்பதைச் சொல்ல வரும் போது அவன் திருமுகச் செவ்வியை முதலில் சொல்ல முயல்கிருன் கம்பன். அது அப்போது எப்படி இருந்தது! அந்தக் காட்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/38&oldid=523240" இலிருந்து மீள்விக்கப்பட்டது