பக்கம்:அழியா அழகு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அழியா அழகு

ஆனல் இடையிலே கைகேயி சொன்ன வாசகத்தைக்

கேட்ட அப்பொழுது, அந்த முகம் தாமரையை வென்று

பொலிவுற்றதை அவள் கண்டிலள்.

மேலே சொன்ன பாட்டினல்,

திருமுகச் செவ்வி நோக்கின்

ஒப்பதே முன்பு பின்பு என்பதில் உள்ள முன்பு. பின்பு என்ற நிலைகளை வேறு, வேருகவும், அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது' என்ற கிலேயை வேருகவும் பிரித்து உணர்வதே சிறப்பென வும், முன்னே சொன்ன இரண்டு கிலேகளிலும் திருமுகச் செவ்வி தாமரையை ஒத்திருந்ததென்றும், கேட்ட அப். பொழுது வென்றதென்றும் கொள்வது பொருத்தமெனவும். விளங்குகிறதல்லவா?

3

கைகேயியின் சொற்களேக் கேட்டபோது இராமன் முகம், தன் இயற்கையான பொலிவினும் சிறந்து விளங்கியது. இது காண்பதற் கரிய காட்சி. அதனல் கம்பன், 'அம்மா' என்ற சொல்லேப் பாட்டின் இறுதியில் வைத்து அந்த வியப்பைப் புலப்படுத்துகிருன்:

அலர்ந்த செக்தா

மரையினை வென்ற தம்மா!

அவ்வாறு அம் முகம் பொலிவு பெற்றதற்குக் காரணம் என்ன? தாமரையின் பொலிவில்கூட இப்படி வியப்பதற்குரிய தன்மை ஒன்று உண்டு. தாமரை மலர் மெல்லியது; தண்ணியது; அது வெப்பத்துக்கு மாருன, இயல்பை உடையது. ஆயினும் கோடைக் காலத்தில் கண்பகலில் அம்மலர் கன்ருக விட்டு விளங்கும். பனிக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/44&oldid=523246" இலிருந்து மீள்விக்கப்பட்டது