பக்கம்:அழியா அழகு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவு கண்டவர்

ஜனகனுடைய சபை: அவனுடைய குருவும் கோதம முனிவரின் புத்திரருமாகிய சதானந்தர் அருகில் வீற்றிருக் கிருர்; விசுவாமித்திர முனிவர் இராமனேயும் லட்சுமண னேயும் அழைத்து வந்திருக்கிருர். தாடகையை அழித்து அகலிகைக்கு முன்னேயுருத் தங்துவிட்டு விசுவாமித்திர ருடைய பாராட்டைப் பெற்று வந்திருக்கிருன் இராமன்.

தன்முன் அமர்ந்திருக்கும் இராமலட்சுமணர்களைக் கண்டு அவர்களுடைய அழகைக் கண்ணுல் முகந்துண்ட ஜனகன், "இவர்கள் யார்? உரைத்தருள வேண்டும்' என்று முனிவரைக் கேட்கிருன், அம்முனிவர் சூரிய குலத்தின் பெருமையைக் கூறி, தசரதனுடைய முன்னேர் பெருமை யையும், அச்சக்கரவர்த்தியின் சிறப்பையும் விரித்துரைத்து. இராமன் முதலிய கால்வருடைய அவதாரத்தையும் சொல் கிருர்.

அவர் சொல்லச் சொல்ல ஜனகனுக்கு இராமன்மேல் கண் பாய்கிறது.

கல்யாணம் ஆகாத கன்னிப் பெண் ஒருத்தியை வளர்க்கும் அவனுக்கு இன்னும் தக்க மாப்பிள்ளே கிடைக்க வில்லை. மலேபோன்ற வில் ஒன்று நடுவே கிடக்கிறது. அதை வளேக்கிறவனுக்குத்தான் அவளே மணம் செய்து கொடுப்பதாக கிடந்தனே போட்டிருக்கிருன் இதுவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/9&oldid=523211" இலிருந்து மீள்விக்கப்பட்டது