பக்கம்:அழியா அழகு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அழியா அழகு

வில்லே எந்தியபடியே சற்றும் இமையைக் கொட்டாமல் இலக்குவன் காவல் புரிந்து கின்ருன்.

அந்த இரவில் குகனேச் சேர்ந்தவர்கள் யானையின் கூட்டத்தைப் போலச் சற்றே விலகி சின்றும் சுற்றிக் கொண்டும் காவல் புரிந்தார்கள். அவர்களுடைய தலைவ கிைய குகனே வில்லில் அம்பைப் பூட்டிக்கொண்டு கின்ருன். அவன் நெஞ்சு வெம்பி இரங்கியது. இலக்குவனேப் போலவே அவனும் விழித்துக்கொண்டே கின்ருன் இலக்குவன் உறங் காமல் கின்று காவல்புரிவதைக் கண்டபோதும், தனக்குத் தலேவகிைவிட்ட இராமனுடைய நிலைமையை எண்ணிய போதும் அவனுக்குத் துயரம் பொங்கியது. அதற்கு அடை பாளமாகக் கண்கள் நீரைக் கக்கின. கருகருவென்று கின்ற அவன் உருவம், அந்த இருளில் அருவி பொழியும் குன்றைப் போலத் தோன்றியது. -

இராமனுடைய எழிலேயும் குணத்தையும் பகலில் உணர்ந்த குகன் இவ்விரவில் இளையவனுகிய இலக்கு வனது பண்பையும் உணர்ந்து கொண்டான் அது மட்டும் அன்று, உடன் பிறந்த தம்பியாகிய அவன் தன் அணணன்மாட்டு வைத்த அன்பினால் அவனைப் பார்த்துக் கொண்டு, உறங்காமல் விழித்து கிற்க, புதிய அன்பு பூண்ட குகனும் அவனைப்போலவே இமை கொட்டாமல் விழித்து கின்ருன். அவன் இராமனைப் பார்த்ததோடு இலக்குவனே யும் பார்த்துக் கொண்டு சின்ருன். இராமன் பண்பையும் அவனிடம் அன்பு பூண்டவன் பண்பையும் அவன் ஒருங்கே இப்போது பார்த்தான்.

விடிந்தது. காக்லயில் ஆற்றவேண்டிய கடன்களை யெல் லாம் ஆற்றினன் இராமன். பின்பு குகனப் பார்த்து, "நாங் கள் அசகரை சேர்வதற்கு ஏற்ற நாவாயைக் கொண்டுவா" என்ருன். காவாயில் ஏறிக் கங்கையைக் கடந்து காட்டுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/96&oldid=523298" இலிருந்து மீள்விக்கப்பட்டது