பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்69



அவர் பாடினார்.

அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' - என்று

பாடினார். எம்பெருமானுடைய திருவடியைப் பார்த்தார். அது திருவடியாகத் தெரியவில்லை. அது கமலபாதமாகத் தெரியுது. தாமரையாக, இந்த தாமரையைப் பார்த்த பிறகு வேறு எதையும் பார்க்க விரும்பலே என்று பாடினார். அவர் ஹரிஜன், இந்த பட்டாச்சாரியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரச் சொன்னார். அது ஏன் என்று சொன்னா, 30 வருஷமாப் பூஜை பண்ணுனாரே, பெருமாளை, இவர் பெருமாளா நினைச்சாரா, அர்ச்சவதாரம்னு நினைச்சாரு சிறீமந் நாராயணனோட சிம்பல், அடையாளம்னு நினைச்சாரு. தவிர இதுதான் பெருமாள்னு நினைக்கல. திருப்பாணாழ்வாருக்குப் பெருமாள்னுதான் தெரிந்தது. இந்த சிம்பல் எல்லாம் தெரியல. ஆகவே லோகசாரங்க முனிவரைவிடக் கோடி மடங்கு மேலே போயிட்டார். அதனாலதான் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வரச் சொன்னாரு என்று சொன்னேன். ராகவன் அடேய் சைவா, நாங்க வைஷ்ணவங்க எல்லாம் கும்புடறோம்னு' சொன்னார். உண்மையிலேயே அந்த அனுபவம் வந்து விட்ட பிற்பாடு, விக்ரகத்தை பார்த்த பிறகு அமுதினைக் கண்ட கண்களால் மற்றொன்றைப் பார்க்க மாட்டார்கள்! ஆக அனுபவத்தின் ரீதியில் வந்தது இலக்கியம். வாழ்க்கை யோடு ஒட்டியவை அனுபவங்கள்.

71. Cognition பத்தி சொன்னீங்க, pastoral poetryனு தமிழ்ல ஒண்னுமில்லை. அதாவது இயற்கையையும் மனிதரையும்... ஒண்ணா நினைச்சாங்க. ஒண்ணாச் சேர்ந்து இயற்கையைப் பார்க்கும்போதே தன்னைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/77&oldid=481867" இலிருந்து மீள்விக்கப்பட்டது