பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






டெனிஸன்


இனி உயிர் ஏன்?

I

இறந்து போன அவள் வீரனை இல்லம் சேர்த்தனர்.

ஆனால் அவள் அழவுமில்லை, அயர்ந்து விழவுமில்லை.

அவள் செயலைக் கவனித்த தோழியர் அனைவரும்,

"அழவேணும், இன்றேல் இறப்பாள் ! என்றனர்.

II

மெல்லிய குரலில் அவனைப் புகழ்ந்தனர்;

காதலுக்கேற்ற கணவன் என்றனர் ;

உண்மை நண்பன்-உன்னதப் பகைவன் என்றனர்;

ஆயினும் அவள் அசையவுமில்லை, பேசவுமில்லை !

III

தோழி யொருத்தி, ஆரு மறியாமல்,

ஓசையின்றி மெல்ல நடந்துபோய்,

வீரன் முகத்தின் ஆடையை அகற்றினாள்.

ஆயினும் அவள் அசையவுமில்லை, அழவுமில்லை !